இன்ஜின் கோளாறு காரணமாக டெல்லியில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்

இன்ஜின் கோளாறு காரணமாக டெல்லியில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் இருந்து போயிங் 737 ரக விமானம் நேற்று காலை டெல்லி நோக்கி புறப்​பட்​டது. அதில் 161 பயணி​கள் இருந்​தனர். காலை 10.54-க்கு டெல்​லியை நெருங்​கியதும் இன்​ஜினில் கோளாறு இருப்​பது தெரிய வந்​தது. இதையடுத்து அந்த விமானம் இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் அவசர​மாக தரை​யிறக்​கப்​பட்​டது.

இதனைத் தொடர்ந்து அதி​காரி​கள் முழு அவசர நிலை பிரகடனம் செய்​தனர். இதுகுறித்த தகவல் கிடைத்​ததும் தீயணைப்பு வாக​னங்​கள் சம்பவ இடத்​துக்கு உடனடி​யாக அனுப்பி வைக்​கப்​பட்​டன. பயணி​கள் அனை​வரும் பாது​காப்​பாக வெளி​யேற்​றப்​பட்​டனர். யாருக்​கும் எந்​தக் காய​மும் ஏற்​பட​வில்​லை. விமானத்​துக்கு சேதம் எது​வும் ஏற்​பட​வில்லை என்​று தீயணைப்​புத் துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து இண்​டிகோ நிறுவன செய்​தித் தொடர்​பாளர் கூறும்​போது, ‘‘வி​மானம் தரை​யிறங்​கு​வதற்​குச் சற்று முன்​ன​தாகவே தொழில்​நுட்​பக் கோளாறு கண்​டறியப்​பட்​டது. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக​வும், நிலை​யான செயல்​பாட்டு நடை​முறை​களின்​படி​யும், விமானிகள் முன்​னுரிமை அடிப்​படை​யில் தரை​யிறங்க அனு​மதி கோரினர். விமானம் டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் பாது​காப்​பாகத் தரை​யிறங்​கியது’’ என்​றார்.

இன்ஜின் கோளாறு காரணமாக டெல்லியில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்
ஒரே தலைநகராக அமராவதியை அங்கீகரிக்க சட்டப்பூர்வ பாதுகாப்பு கோரும் தீர்மானம்: ஆந்திர சட்டப் பேரவையில் நிறைவேறியது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in