குஜராத்தில் ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

குஜராத்தில் ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
Updated on
2 min read

வடோதரா: குஜ​ராத்​தின் வடோத​ரா​வில் ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்​டங்​களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்டினார்.

முன்​னாள் பிரதமர் மன்​மோகன் சிங் ஆட்​சிக் காலத்​தில் மேற்கு சிறப்பு சரக்கு ரயில் போக்​கு​வரத்து வழித்தட திட்​டம் அறிவிக்கப்பட்​டது. ஆனால் பல ஆண்​டு​களாக இந்த திட்​டம் கிடப்பில் போடப்​பட்டு இருந்​தது. கடந்த 2014-ம் ஆண்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பதவி​யேற்ற பிறகு மேற்கு சிறப்பு சரக்கு ரயில் போக்​கு​வரத்து வழித்தட திட்​டப் பணி​களை விரைவுபடுத்​தி​னார்.

இந்த திட்​டத்​தின் கீழ் டெல்​லி, உத்தர பிரதேசம், ஹரி​யா​னா, ராஜஸ்​தான், குஜ​ராத், மகா​ராஷ்டி​ராவை இணைக்​கும் வகை​யில் சரக்கு ரயில் வழித்​தடங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்றன.

இதன் ஒரு பகு​தி​யாக சனந்த் (வடக்​கு) - மக்​கர்​பு​ரா, நியூ அம்பர்கான்- நியூ சஃபாலே, சஃபேல் - ஜேஎன்​பிடி ஆகிய பகுதிகளை இணைக்​கும் சரக்கு ரயில் வழித்​தடங்​கள் அமைக்கப்பட்டு உள்​ளன. குஜ​ராத்​தின் வடோத​ரா​வில் நேற்று நடை​பெற்ற நலத்​திட்ட விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி புதிய சரக்கு ரயில் வழித்​தடங்​களை தொடங்கி வைத்​தார். மொத்​தம் 326 கி.மீ. தொலை​வுக்கு ரயில் பாதை அமைக்​கப்​பட்டு உள்​ளது. மேலும் ரயில், சாலை வசதி தொடர்​பான பல்​வேறு திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்டி​னார்.

“அங்​கிள்​களுக்​கு” கோபம்

விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: கடந்த 2004-ம் ஆண்​டில் மேற்கு சிறப்பு சரக்கு ரயில் போக்​கு​வரத்து வழித்தட திட்​டம் வரையறுக்​கப்​பட்​டது. இதற்​காக கடந்த 2006-ம் ஆண்​டில் சிறப்பு நிறு​வன​மும் தொடங்​கப்​பட்​டது.

ஆனால் 2014-ம் ஆண்டு வரை சரக்கு ரயில் வழித்தட திட்​டம் கோப்​பு​களில் மட்​டுமே இருந்​தது. ஒரு கி.மீ. தொலை​வுக்​கு​கூட ரயில் பாதை அமைக்​கப்​பட​வில்​லை. கடந்த 2014-ம் ஆண்டு மத்​தி​யில் பாஜக அரசு பதவி​யேற்ற பிறகு திட்​டப் பணி​கள் வேகம் பெற்​றன. தற்​போது 2,800 கி.மீ. தொலை​வுக்கு சரக்கு ரயில் வழித்​தடங்​கள் அமைக்​கப்​பட்டு உள்​ளன. இதன் மூலம் கிழக்​கு, வடக்கு இந்​தி​யாவை சேர்ந்த விவ​சா​யிகள் பலன் அடைந்து வரு​கின்​றனர்.

கிழக்​கு, மேற்கு சரக்கு வழித்​தடங்​களில் தற்​போது 430 சரக்கு ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. கடந்த ஆட்​சிக் காலத்​தில் ஒரு சரக்கு ரயில் 100 கி.மீ. தொலை​வைக் கடக்க ஆறரை மணி நேரம் தேவைப்​பட்​டது. தற்​போது ஒரு சரக்கு ரயில் 3.15 மணி நேரத்​தில் 100 கி.மீ. தொலைவை கடக்​கிறது.

மும்​பை- வடோதரா வழித்​தடத்​தில் இரட்டை அடுக்கு வசதி கொண்ட சரக்கு ரயில் இயக்​கப்​படு​கிறது. இந்த தடத்​தில் செல்​லும் சரக்கு ரயி​லில் ஒரே நேரத்​தில் 250 லாரி​களை சுமந்து செல்ல முடி​யும். இந்த அபார வளர்ச்​சி​யைப் பார்த்து சில “அங்கிள்களுக்கு” கோபம் எழுகிறது.

ரயில்​களில் சரக்​கு​களை எடுத்​துச் சென்​றால் லாரி ஓட்​டுநர்​களின் நிலை என்​ன​வாகும் என்று அவர்​கள் கேள்வி எழுப்​பக்​கூடும். சிலர் பொய்​களை மட்​டுமே பரப்பி வரு​கின்​றனர். அவர்​களின் மாய வலைகளில் இளைஞர்​கள் சிக்க மாட்​டார்​கள். பொய்​மை​யை, வாய்மை தோற்​கடிக்​கும். இந்​திய இளைஞர்​கள் நமது நாட்டை வளர்ச்​சிப் பாதை​யில் அழைத்​துச் செல்​வார்​கள்.

2047-ல் வளர்ச்​சி​யடைந்த இந்​தியா

கடந்த 2014 முதல் இது​வரை 50,000-க்​கும் மேற்​பட்ட அதிநவீன ரயில் பெட்​டிகள் தயாரிக்​கப்​பட்டு உள்​ளன. கடந்த கால ஆட்​சி​யின்​போது 10 ஆண்​டு​களில் 50,000 கழிப்​பறை​களைக்​கூட கட்​ட​வில்​லை. ரயில் பெட்​டிகள், மெட்ரோ ரயில் பெட்​டிகள், ரயில் இன்​ஜின்​களின் உற்​பத்தி மைய​மாக இந்​தியா உரு​வெடுத்​திருக்​கிறது.

செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தில் இந்​திய இளைஞர்​கள் பல்​வேறு சாதனை​களை படைத்து வரு​கின்​றனர். இந்த துறை​யில் சர்​வ​தேச அளவில் இந்​தியா கோலோச்ச வேண்​டும்.

வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த இலக்கை எட்ட இந்​தி​யர்​கள்​ அனை​வரும்​ அயராது உழைக்​க வேண்​டும்​. இவ்​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.

குஜராத்தில் ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தடை நீட்டிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in