மேகாலயா, மணிப்பூர், திரிபுரா தினம்: குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

மேகாலயா, மணிப்பூர், திரிபுரா தினம்: குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து
Updated on
1 min read

புதுடெல்லி: மே​கால​யா, திரிபு​ரா, மணிப்​பூருக்கு மாநில அந்தஸ்து வழங்​கப்​பட்ட தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது.

இதை முன்​னிட்டு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், ”நாட்​டின் வளர்ச்​சிக்கு மேகால​யா, திரிபு​ரா, மணிப்​பூர் மாநிலங்​களின் திறமை​யான மக்​கள் கணிச​மான பங்​களிப்பை வழங்கி வரு​கின்​றனர். அதற்​காக அவர்​களுக்கு வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன்” என கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ”இந்த நாட்​டின் வளர்ச்​சிக்கு மணிப்​பூர், மேகாலயா, திரிபுரா மக்​கள் அர்ப்​பணிப்​புடன் செய​லாற்​றுகின்​றனர். இந்த மாநிலங்​களின் மக்​கள் வளமான வாழ்வு வாழ பிரார்த்​திக்​கிறேன்” என கூறியுள்ளார்​.

மேகாலயா, மணிப்பூர், திரிபுரா தினம்: குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து
“குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களை காப்போம்” - தினகரனுக்கு பழனிசாமி வாழ்த்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in