

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில், ‘தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில், ‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயலலிதாவின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். சரித்திர வெற்றியை படைத்திடுவோம்’ என பதிவிட்டுள்ளார்.