குஜராத்தில் ரூ.14,000 கோடி திட்டம்: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

குஜராத்தில் ரூ.14,000 கோடி திட்டம்: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
Updated on: 
1 min read

புதுடெல்லி: குஜராத்​தின் பனஸ்​கந்​தாவில் உள்ள பாரத கால்​நடை இனப்​பெருக்​கம் மற்​றும் ஆராய்ச்சி மையத்​தின் பண்​ணையை பிரதமர் மோடி இன்று காலை பார்​வை​யிடு​கிறார். பின்​னர் பனஸ்​கந்​தாவில் நடை​பெறும் விழா​வில் ரூ.14,000 கோடி மதிப்​பிலான பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களை அவர் தொடங்கி வைக்​கிறார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டு​கிறார்.

மேலும் பிஎம் கிஷான் திட்​டத்​தின் கீழ் 24-வது தவணை​யாக குறு, சிறு விவசாயிகளுக்கு ரூ.19,000 கோடியை பிரதமர் மோடி விடுவிக்​கிறார். இரு ரயில் சேவை​களை அவர் தொடங்கி வைக்கிறார். அகமதாபாத் மெட்ரோ இரண்​டாம் கட்ட திட்டங்களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டு​கிறார். பின்​னர் ஏக்தா நகருக்கு பிரதமர் நரேந்​திர மோடி செல்​கிறார். அங்கு பாரத் திருவிழாவை தொடங்கி வைக்​கிறார்.

இர​வில் நடை​பெறும் நர்​மதை ஆரத்தி நிகழ்ச்​சி​யில் அவர் பங்​கேற்​கிறார். இதன்​பிறகு சனிக்​கிழமை காலை ஏக்தா நகரில் உள்ள ஒற்​றுமை சிலைக்கு (சர்​தார் படேல் சிலை) பிரதமர் மோடி மலர்​தூவி மரியாதை செலுத்து​கிறார். அங்கு நடை​பெறும் விழா​வில் ரூ.400 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களை தொடங்கி வைக்​கிறார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டு​கிறார்.

பின்​னர் ஏக்தா நகரின் வனப்​பகுதி​களை அவர் பார்வையிடுகிறார். மாலை 5.30 மணிக்கு சர்​தார் படேலின் 151-வது பிறந்த தினத்​தை​யொட்டி நடை​பெறும் தேசிய ஒற்​றுமை தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

குஜராத்தில் ரூ.14,000 கோடி திட்டம்: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
இலவச பேருந்து பயணம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவாக்கம்

X