இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
Updated on
1 min read

புதுடெல்லி: ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் உள்ள கட்​சித் தொண்​டர்​களுக்​குப் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று வாழ்த்​துகளைத் தெரி​வித்​தார். மேலும், எதி​லும் இந்தி​யா​வுக்கே முதலிடம் என்ற கொள்​கை​யின் அடிப்​படை​யில் பாஜக தொடர்ந்து இயங்கி வரு​வ​தாக அவர் பெரு​மிதத்​துடன் கூறினார்.

இது தொடர்​பாக 'எக்​ஸ்' வலை​தளத்​தில் பிரதமர் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: பாஜக எப்​போதும் தேச நலனுக்கே முன்​னுரிமை அளித்து வரு​கிறது. சமூக சேவை செய்​வ​தி​லும், நாட்டை முன்​னேற்​று​வ​தி​லும் எமது கட்சி முன்​னணி​யில் நிற்கிறது. அடிமட்ட அளவில் தன்​னலமற்ற சேவையைத் தொடர்ந்து வழங்கி வரும் லட்​சக் ​கணக்​கான தொண்​டர்​களின் உழைப்​பால் கட்​சி​யின் சித்​தாந்​தம் கடைக்​கோடி மக்​களை​யும் சென்​றடைந்​துள்​ளது.

கடந்த பல தசாப்​தங்​களாகக் கட்​சி​யின் வளர்ச்​சிக்​காகத் தியாகம் செய்த எண்​ணற்ற தொண்​டர்​களின் தியாகத்தை இந்த நாளில் நினை​வு​கூர்​கிறோம். மக்​களின் நலனை மைய​மாகக் கொண்டே மத்​திய அரசும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் செயல்படுகின்றன.

வளர்ச்​சி​யடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்​கிய எங்​களது பயணம் தொய்​வில்​லாமல் தொடரும். நமது கூட்டு உறு​திப்​பாடு இந்​தி​யாவை முன்​னேற்​றத்​தின் புதிய உச்​சத்​துக்கு அழைத்​துச் செல்​லும். இவ்​வாறு பிரதமர்​ பதி​விட்​டுள்​ளார்​.

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
தி.நகர் தொகுதியில் தீயாய் வேலை செய்யும் கட்சிகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in