“ஏஐ உச்சி மாநாட்டில் காங்கிரஸ் கட்சி செய்தது கண்ணியமற்ற அரசியல்” - பிரதமர் மோடி தாக்கு

“ஏஐ உச்சி மாநாட்டில் காங்கிரஸ் கட்சி செய்தது கண்ணியமற்ற அரசியல்” - பிரதமர் மோடி தாக்கு
Updated on
2 min read

மீரட்: டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் ஆடையை களைந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த நிகழ்வில், ரூ.12,930 கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக, நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ் ரயில் மற்றும் மீரட் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருந்தார்.

அதன் பின்னர் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது: “இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச நிகழ்வு ஒன்றில் காங்கிரஸ் கட்சி கண்ணியமற்ற அரசியலை அரங்கேற்றும் அரங்கமாக பயன்படுத்தியது. வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் முன்பாக ஆடையை காங்கிரஸ் கட்சியினர் களைந்து நின்றனர்.

நீங்கள் அப்படித்தான் என்று தேசம் மக்கள் அறிவார்கள். அப்படி இருக்கும்போது ஏன் உங்களது ஆடையை களைய வேண்டும்? இதை நான் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.

இந்தியாவை அவமதித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் இத்தகைய செயலுக்கு அக்கட்சியின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக உள்ளது நிலைமை. இந்தச் செயலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியினர் அவர்களை விட்டு சற்று விலகி உள்ளனர்.

நீங்கள் பிரதமர் அரியணையில் அமர வேண்டுமென்றால் மக்களின் நம்பிக்கையை முதலில் பெற வேண்டும். இன்று வளர்ந்த நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சியில் தங்களின் எதிர்காலத்தை அவர்கள் பார்க்கிறார்கள். 21-ம் நூற்றாண்டில் எதிர்கொள்ளும் சவாலுக்கு இந்தியா தீர்வு தரும் என உலகம் கருதுகிறது.

முன்னொரு காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள விருப்பம் இருந்தும், அது நடக்காத ஒன்றாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது” என்றார் பிரதமர் மோடி.

ஆடையை களைந்து போராட்டம்: டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் கடந்த 20-ம் தேதி அன்று இளைஞர் காங்​கிரஸை சேர்ந்த சிலர் அரங்கம் 5-ல் திடீரென நுழைந்​தனர். பிரதமர் நரேந்​திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகைப்​படங்​கள் அச்​சிடப்​பட்ட டி சர்ட்களை அவர்​கள் அணிந்​திருந்​தனர். அந்த டி சர்ட்​களில், இந்​திய, அமெரிக்க வர்த்தக ஒப்​பந்​தம், எப்​ஸ்​டீன் பைல் உள்ளிட்ட வாசகங்கள் இருந்தன.

திடீரென இளைஞர் காங்​கிரஸ் தொண்​டர்​கள் டி சர்ட்டை களைந்து பிரதமர் மோடிக்கு எதி​ராக​வும் இந்​திய, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்​துக்கு எதி​ராக​வும் கோஷமிட்​டனர். போராட்​டத்​தில் ஈடுபட்ட காங்​கிரஸ் தொண்​டர்​களை டெல்லி போலீ​ஸார் கைது செய்து அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தினர். பின்​னர் அவர்​கள் விடுவிக்கப்​பட்​டனர். போராட்​டத்தை முன்​னின்று நடத்​திய 4 பேரிடம் மட்​டும் விசா​ரணை நடை​பெற்றது. இந்நிலையில், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் 4 பேரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

“ஏஐ உச்சி மாநாட்டில் காங்கிரஸ் கட்சி செய்தது கண்ணியமற்ற அரசியல்” - பிரதமர் மோடி தாக்கு
ஓய்வு குறித்து கால்பந்தாட்ட வீரர் நெய்மார் சூசகம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in