மே 4-ல் திரிணமூல் காங்கிரஸின் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி: பிரதமர் மோடி கருத்து

மே 4-ல் திரிணமூல் காங்கிரஸின் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி: பிரதமர் மோடி கருத்து
Updated on
2 min read

கொல்கத்தா: வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்​கை​யின் போது திரிண​மூல் காங்​கிரஸின் காட்​டாட்​சிக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

மேற்கு வங்​கத்​தில் இரு கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறுகிறது. முதல் கட்​ட​மாக 152 தொகு​தி​களுக்கு நேற்று முன்​தினம் தேர்​தல் நடத்​தப்​பட்​டது. இதில் 92.72 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின. இரண்​டாம் கட்ட தேர்​தல் வரும் 29-ம் தேதி நடை​பெற உள்​ளது.

இந்த சூழலில் மேற்கு வங்​கத்​தின் பனிஹாட்டி பகு​தி​யில் நேற்று நடை​பெற்ற பாஜக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: மேற்கு வங்​கத்​தில் ஆட்சி நடத்​தும் திரிண​மூல் காங்​கிரஸ், பெண்​களுக்கு எதி​ராகச் செயல்​பட்டு வரு​கிறது. இந்​தக் கட்​சி​யின் காட்​டாட்​சி​யால் சந்​தேஷ்​காளி பகுதி பெண்​கள் மிகக் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டனர். பெண் மருத்​து​வர் கொடூர​மாகக் கொலை செய்​யப்​பட்​டார்.

முதல் கட்ட தேர்​தலில் மாற்​றத்​துக்​கான அலையை தெளி​வாக காண முடிந்​தது. பாஜக​வுக்கு ஆதர​வாகவே மக்​கள் வாக்​களித்து உள்​ளனர். மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்​கை​யின் போது திரிண​மூல் காங்​கிரஸின் காட்​டாட்​சிக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கப்​படும். மாநிலத்​தில் பாஜக அரசு பதவி​யேற்​கும். இதன் பிறகு பெண்​களுக்கு எதி​ரான குற்ற வழக்​கு​கள் அனைத்​தும் மீண்​டும் விசா​ரிக்​கப்​படும். தவறு இழைத்​தவர்​கள் தப்​பிக்க முடி​யாது. அவர்​கள் சட்​டத்​தின் முன்பு நிறுத்​தப்​படு​வார்​கள்.

மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்த வகை செய்​யும் மசோதா அண்​மை​யில் மக்​களவை​யில் கொண்டு வரப்​பட்​டது. இந்த மசோ​தாவை திரிண​மூல் காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தோற்​கடித்​தன. இதற்கு மேற்கு வங்க பெண்​கள் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தகுந்த பாடம் கற்​பிப்​பார்​கள்.

பாஜக ஆட்சி அமைத்​தால் பெண்​களுக்கு மாதம் ரூ.3,000 என்ற வகை​யில் ஓராண்​டுக்கு ரூ.36,000 நிதி​யுதவி வழங்​கப்​படும். கடந்த 15 ஆண்​டு​களாக மேற்கு வங்​கத்தை திரிண​மூல் சூறை​யாடி வரு​கிறது. அரசு பணிக்கு லஞ்​சம், சிட்​பண்ட் ஊழல், நிலக்​கரி சுரங்க ஊழல், ரேஷன் ஊழல் என அடுத்​தடுத்து அம்​பல​மாகி வரு​கின்​றன. இந்த ஊழல் ஆட்​சியை அகற்ற மக்​கள் தயா​ராகி விட்​டனர்.

ஊடுரு​வல்​காரர்​களுக்கு ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் முழு ஆதரவு அளிக்​கிறது. இதன்​மூலம் மேற்​கு​வங்​கத்​தின் கலாச்​சா​ரம் அழிக்​கப்​பட்டு வரு​கிறது. பாஜக ஆட்சி அமைத்​தால் ஊடுரு​வல் முழு​மை​யாக தடுக்​கப்​படும். ஊடுரு​வல்​காரர்​கள் வெளி​யேற்​றப்​படு​வார்​கள்​. இவ்​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.

பனிஹாட்டியில் பெண் மருத்துவரின் தாய்: கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மேற்குவங்க போலீஸார் ஆதாரங்களை அழித்ததாகவும் உண்மைகளை மறைத்ததாகவும் புகார்கள் எழுந்தன. கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாயார் ரத்னா தேவ்நாத் மேற்குவங்கத்தின் பனிஹாட்டி தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். பனிஹாட்டியில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவரும் மேடையில் அமர்ந்திருந்தார்.

மே 4-ல் திரிணமூல் காங்கிரஸின் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி: பிரதமர் மோடி கருத்து
திருப்பதி ஏழுமலையானுக்கு 7 தங்கப் பதக்கம் காணிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in