51,000 பேருக்கு பணி ஆணை வழங்கிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Updated on
2 min read

புதுடெல்லி: பொது நலனுக்கு முக்​கி​யத்​து​வம் அளித்து குடிமக்​களுக்கு சேவை​யாற்ற வேண்​டும் என்​று, 20-வது வேலை​வாய்ப்பு திரு​விழாவை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்​தி​னார்.

மத்​திய அரசு நடத்​தும் 20-வது வேலை​வாய்ப்பு திரு​விழா (ரோஜ்​கார் மேளா) நாடு முழு​வதும் நேற்று 45 இடங்​களில் ஒரே நேரத்​தில் நடை​பெற்​றது. இதில், வரு​வாய் மற்​றும் நிதிச் சேவை​கள், ரயில்​வே, உள்​துறை, சுகா​தா​ரம் மற்​றும் குடும்ப நலன், பாது​காப்பு உள்​ளிட்ட மத்​திய அரசு அமைச்​சகங்​கள் மற்​றும் துறை​களில் புதி​தாக பணி​யில் சேர உள்ள 51,000-க்​கும் மேற்​பட்ட இளைஞர்​களுக்கு பணி நியமன ஆணை​கள் வழங்​கப்​பட்​டன. இந்த திரு​விழாவை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்​தார்.

இந்த புதிய நியமனங்​களு​டன், வேலை​வாய்ப்பு திரு​விழா திட்​டத்​தின் மூலம், இது​வரை வழங்​கப்​பட்​டுள்ள பணி நியமன ஆணை​களின் எண்​ணிக்கை சுமார் 12.75 லட்​ச​மாக அதி​கரித்​துள்​ளது.

இந்​நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: மத்​திய அரசு துறை​களில் புதி​தாக சேரும் பணி​யாளர்​களுக்​கும், அவர்​களது குடும்​பத்​தினருக்​கும் எனது வாழ்த்​துகள். 2047-ம் ஆண்​டுக்​குள் இந்​தி​யாவை வளர்ந்த நாடாக மாற்​றும் இலக்​குடன், வளர்ச்​சி​யடைந்த, தற்​சார்பு கொண்ட இந்​தி​யாவை உரு​வாக்​கு​வ​தில் புதிய பணி​யாளர்​கள் முக்​கிய பங்​காற்​று​வார்​கள். குடிமக்​களின் நம்​பிக்​கையே அரசின் உண்​மை​யான பலம்.

ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள், உதவித் தொகைக்​காக காத்​திருக்​கும் மாணவர்​கள், அரசு நலத்​திட்​டப் பலன்​களை எதிர்​பார்க்​கும் விவ​சா​யிகள் உள்​ளிட்​டோர், பெரும்​பாலும் அரசு அதி​காரி​கள் மூல​மாகவே அரசை அணுகு​கின்​றனர். உங்​களது நடத்​தை, தொடர்ச்​சி​யான செயல்​பாடு, திறன், நேர்மை ஆகிய​வையே மக்​களுக்கு அரசு வழங்கும் சேவை அனுபவத்தை தீர்​மானிக்​கும். தங்​களுக்கோ தங்​களது குடும்​பத்​தினருக்கோ அரசு சேவை​களைப் பெறு​வ​தில் ஏற்​பட்​டிருக்​கக்​கூடிய சிரமங்​களை அகற்ற புதிய பணி​யாளர்​கள் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

தேசிய கல்விக் கொள்​கை, ஸ்கில் இந்​தி​யா, பிரதமரின் திறன் மேம்​பாட்​டுத் திட்​டம், விரிவுபடுத்​தப்​பட்ட தொழிற்​ப​யிற்சி வாய்ப்​பு​கள் உள்​ளிட்​டவை கல்வி மற்​றும் திறன்​களை தொழில் துறை​யின் தேவை​களு​டன் இணைக்க உதவு​கின்​றன.

பிரதமரின் திறன் மேம்​பாடு மற்​றும் வேலை​வாய்ப்பு தகுதி மாற்​றுத் திட்​டத்​தின் கீழ் (PM-SETU), 1,000 அரசு தொழிற்​ப​யிற்சி நிறு​வனங்​கள் நவீனமய​மாக்​கப்​பட்டு வரு​கின்​றன. இதற்​காக ரூ.60,000 கோடி முதலீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வில் அங்​கீகரிக்​கப்​பட்ட ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்​களில் 50%, 2 மற்​றும் 3-ம் நிலை நகரங்​களில் அமைந்​துள்​ளன. சிறிய நகரங்​களைச் சேர்ந்​தவர்​களின் தொழில்​முனைவு மற்​றும் வேலை​வாய்ப்பு உரு​வாக்​கத்​தில் பங்​களிப்பு அதி​கரித்து வரு​வதை இது காட்​டு​கிறது.

சுமார் ரூ.1 லட்​சம் கோடி நிதி ஒதுக்​கீட்​டுடன் செயல்​படுத்​தப்​படும் ‘பிரதமரின் வளர்ச்​சி​யடைந்த இந்​தியா வேலை​வாய்ப்​புத் திட்​டம்’ புதிய வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வதற்கு ஆதர​வளிக்​கும்.

சுமார் 40 நாடு​களு​டன் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தங்​கள், இந்​திய தொழில்​முனை​வோருக்கு புதிய சந்​தைகள் மற்​றும் வர்த்தக கூட்​டாண்​மை​களை உரு​வாக்​கு​வதுடன், புதிய வேலை​வாய்ப்​பு​களை​யும் உரு​வாக்​கும்.

புதிய அரசு ஊழியர்​கள் தங்​களது பணியை நாட்​டுக்​குச் செய்​யும் சேவை​யாகக் கரு​தி, திறன், நேர்மை மற்​றும் குடிமக்​களுக்கு முன்​னுரிமை என்ற அணுகு​முறை​யுடன் தங்​களது கடமை​களை நிறைவேற்​ற வேண்​டும்​. இவ்​வாறு பிரதமர்​ மோடி கூறி​னார்​.

<div class="paragraphs"><p>பிரதமர் மோடி </p></div>
டெல்லி பல்கலை. தேர்தலில் 3 இடங்களில் ஏபிவிபி வெற்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in