பெட்ரோல், சமையல் காஸ், உரம் தடையின்றி விநியோகம்: மக்களவையில் பிரதமர் மோடி வாக்குறுதி

பெட்ரோல், சமையல் காஸ், உரம் தடையின்றி விநியோகம்: மக்களவையில் பிரதமர் மோடி வாக்குறுதி
Updated on
1 min read

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் பெட்​ரோல், சமையல் காஸ் தடையின்றி விநி​யோகம் செய்​யப்​படும். விவ​சா​யிகளுக்கு தடையின்றி உரங்​கள் வழங்​கப்​படும் என்று மக்​களவை​யில் பிரதமர் நரேந்​திர மோடி வாக்​குறுதி அளித்​து உள்​ளார்.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் போர் குறித்து பிரதமர் நரேந்​திர மோடி மக்​களவை​யில் நேற்று விளக்​கம் அளித்​தார். அவர் கூறிய​தாவது: மேற்கு ஆசி​யா​வின் தற்​போதைய நிலைமை மிகுந்த கவலை​யளிக்​கிறது. 3 வாரங்​களுக்​கும் மேலாக பிரச்​சினை நீடிக்​கிறது. இதனால் சர்​வ​தேச பொருளா​தா​ரம் மிகக் கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது. தற்​போதைய போரால் நமது நாட்​டில் பல்​வேறு சவால்​கள் எழுந்​துள்​ளன.

போரின் எதிர்​விளை​வாக உலகின் மிக முக்​கிய கடல்​வழி போக்குவரத்து (ஹார்​முஸ் ஜலசந்​தி) முடங்​கி​யிருக்​கிறது. இதனால் கச்சா எண்​ணெய், எரி​வாயு போக்​கு​வரத்து மோச​மாகப் பாதிக்​கப்​பட்டு உள்​ளது. வளை​குடா நாடு​களில் சுமார் ஒரு கோடி இந்​தி​யர்​கள் வசிக்​கின்​றனர். அவர்​களின் பாது​காப்​பில் மத்​திய அரசு மிகுந்த அக்​கறை கொண்​டிருக்​கிறது. பல்​வேறு நாடு​களின் சரக்கு கப்பல்களில் இந்​தி​யர்​கள் பெரும்​பான்​மை​யாக பணியாற்றி வருகின்றனர்.

அவர்​களை பாது​காக்க பல நாடு​களின் தலை​வர்​களிடம் வலியுறுத்​தி​யிருக்​கிறேன். போரால் பாதிக்​கப்​பட்ட இந்தியர்களுக்கு உதவ 24 மணி நேர கட்​டுப்​பாட்டு அறை, அவசர உதவி எண்​கள் அறிவிக்​கப்​பட்டு உள்​ளன. ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​தி​யா​வுக்கு கச்சா எண்​ணெய், எரி​வா​யு, உரங்​கள் கொண்​டு​வரும் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து முடங்​கி​யிருக்​கிறது.

இப்​போதைய இக்​கட்​டான காலத்​தி​லும் பெட்​ரோல், டீசல், காஸ் விநி​யோகம் சீராக நடை​பெற்று வரு​கிறது. இந்​தி​யா​வின் சமையல் காஸ் தேவை​யில் 60 சதவீதம் வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. உள்​நாட்​டில் சமையல் காஸ் உற்பத்தி அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது. நாடு முழு​வதும் பெட்​ரோல், டீசல், சமையல் காஸ், உரம் தட்​டுப்​பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு இருக்​கிறது.

41 நாடு​களில் இருந்து...

கச்சா எண்​ணெய், எல்​என்​ஜி, எல்​பிஜி ஆகியவை முன்பு 27 நாடு​களில் இருந்து கொள்​முதல் செய்யப்பட்டது. தற்​போது 41 நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்யப்​படு​கிறது. நமது நாட்​டில் 53 லட்​சம் மெட்​ரிக் டன் கச்சா எண்​ணெய் இருப்பு உள்​ளது. இதனை 65 மெட்​ரிக் டன்​னாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

பெட்​ரோலில் 20% எத்​த​னால்...

சுமார் 10 ஆண்​டு​களுக்கு முன்பு பெட்​ரோலில் 1.5 சதவீத எத்​த​னால் கலக்​கப்​பட்​டது. தற்​போது 20 சதவீத எத்​த​னால் கலக்​கப்​படு​கிறது. இதன்​மூலம் 4.5 கோடி பேரல்​கள் கச்சா எண்​ணெய் இறக்​குமதி குறைந்​திருக்​கிறது. நாடு முழு​வதும் பெரும்​பாலான ரயில் வழித்​ தடங்​கள் மின்சாரமயமாக்கப்​பட்டு உள்​ளன. இதன் ​காரண​மாக 180 கோடி லிட்​டர் டீசல் மிச்​சப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. இவ்​வாறு பிரதமர்​ நரேந்திர மோடி பேசி​னார்​.

பெட்ரோல், சமையல் காஸ், உரம் தடையின்றி விநியோகம்: மக்களவையில் பிரதமர் மோடி வாக்குறுதி
பாமகவும் 18 தொகுதிகளும்: அன்புமணிக்கு காத்திருக்கும் சவால்கள், சம்பவங்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in