பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பதிவுகள்: மெட்டா இந்தியா தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு

பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பதிவுகள்: மெட்டா இந்தியா தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு
Updated on
1 min read

ஹைதராபாத்: நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு தொடர்​பாக டெல்லியில் நடை​பெற்ற கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி​யின் (சிஜேபி) மாணவர் போராட்​டங்​களின் போது, பிரதமர் மோடியைக் குறி​வைத்து முகநூல் (பேஸ்​புக்), இன்​ஸ்​டாகி​ராமில் அவதூறு வீடியோக்​கள் மற்​றும் புகைப்​படங்​களைப் பரப்​பிய​தாக, மெட்டா அமைப்​பின் இந்​தி​யத் தலை​வர் அருண் ஸ்ரீனிவாஸ் மற்றும் பல சமூகவலைதள கணக்​கு​களின் மீது ஹைத​ரா​பாத் சைபர் கிரைம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

இதுதொடர்பாக தெலங்​கானா பாஜக நிர்​வாகி டி.சாய்​கிரண் கவுட், தொழில​திபர் எஸ்.அரவிந்த் ரெட்டி (29) ஆகிய இரு​வரும் புகார் அளித்​தனர். அதில், இன்​ஸ்​டாகி​ராம் மற்​றும் பேஸ்​புக் பக்​கங்​களைப் பார்​வை​யிட்​ட​போது, பிரதமரை மிக​வும் ஆபாசமாகவும், கீழ்த்​தர​மாக​வும், தவறான வழி​யில் சித்​தரிக்​கும் வகை​யிலும் செயற்கை நுண்​ணறிவு மூலம் மாற்​றியமைக்​கப்​பட்ட புகைப்​படங்​கள் மற்​றும் வீடியோக்​கள் பகிரப்​பட்​ட​தாக​வும் தெரி​வித்​துள்​ளனர்.

செயற்கை நுண்​ணறிவு மூலம் உரு​வாக்​கப்​பட்ட இத்​தகைய போலி உள்​ளடக்​கங்​கள், பொது​மக்​களைத் தவறாக வழிநடத்​த​வும், வன்​முறையைத் தூண்​ட​வும், சட்​டம்​-ஒழுங்​கைச் சீர்குலைத்துச் சமூகப் பிரி​வினையை ஏற்​படுத்​த​வும் கூடிய ஆபத்து கொண்​ட​வை​யாக உள்​ள​தாக தெரி​வித்​துள்​ளனர்.

இந்நிலை​யில், மெட்டா அமைப்​பின் இந்​தி​யத் தலை​வர் அருண் ஸ்ரீனிவாஸ் மற்​றும் பல சமூக வலைதள கணக்​கு​களின் மீது ஹைத​ரா​பாத் சைபர் கிரைம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்துள்​ளனர்.

முன்​ன​தாக, டெல்லி ஜந்​தர் மந்​தரில் நடை​பெற்ற மாணவர் போராட்​டங்​கள் மற்​றும் ஜூலை 20 பேரணி​யின் போது பிரதமருக்கு எதி​ராகப் பதிவேற்​றப்​பட்ட அனைத்து அவதூறு வீடியோக்​கள் மற்​றும் கருத்​துகளை உடனடி​யாக நீக்​கு​மாறு பேஸ்புக், இன்​ஸ்​டாகி​ராம் உள்​ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு டெல்லி போலீ​ஸார் ஏற்​கெனவே உத்தரவிட்டிருந்​தது நினை​வு​கூரத்​தக்​கது.

பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பதிவுகள்: மெட்டா இந்தியா தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு
2027 ‘எஸ்சிஓ' மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in