டெலிகிராமில் சினிமா, தொடர்: 15 நாளில் பதிலளிக்க நோட்டீஸ்

டெலிகிராமில் சினிமா, தொடர்: 15 நாளில் பதிலளிக்க நோட்டீஸ்
Updated on
1 min read

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்​தாள் டெலிகி​ராம் செயலி வழி​யாக கசிந்​த​தாக எழுந்த புகாரை அடுத்​து, தேர்வு முறை​கேடு​களைத் தடுக்க கடந்த மாதம் நடை​பெற்ற நீட் மறு​தேர்வின்போது இந்தியா​வில் டெலிகி​ராம் செயலிக்கு மத்​திய அரசு தற்​காலிகத் தடை விதித்​தது.

இந்​நிலை​யில் டெலிகி​ராம் மூல​மாக திரைப்​படங்​கள், ஒடிடி தொடர்​கள் திருட்​டுத்​தன​மாக வெளி​யிடப்​படு​வ​தாக தொடர்ந்து புகார்​கள் கூறப்​படு​கின்​றன. இந்த ஆன்​லைன் திருட்டு தொடர்பாக 3,000-க்​கும் மேற்​பட்ட டெலிகி​ராம் சேனல்​கள் மீது மத்திய அரசு ஏற்​கெனவே நடவடிக்கை எடுத்​திருந்​தது.

இந்​நிலை​யில் இந்த விவ​காரம் தொடர்​பாக டெலிகி​ராம் நிறுவனத்​துக்கு தகவல் மற்​றும் ஒலிபரப்பு அமைச்​சகம் நேற்று மீண்​டும் நோட்​டீஸ் அனுப்​பியது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: பதிப்​புரிமை பெற்ற திரைப்​படங்​கள் மற்​றும் வெப் தொடர்​கள் எவ்​வித அனு​ம​தி​யும் இல்​லாமல் டெலிகிராமில் பகிரப்​படு​வ​தாக அதன் உரிமை​யாளர்​கள் புகார் அளித்​துள்​ளனர். இவற்றை ஆய்வு செய்​து, திருட்டு தனமாகத் திரைப்​படங்​களை​யும், ஓடிடி தொடர்​களை​யும் வெளி​யிடும் 3,142 டெலிகி​ராம் சேனல்​களை நாங்​கள் அடை​யாளம் கண்​டுள்​ளோம்.

விதி​மீறல்​களில் ஈடு​படும் சேனல்​கள், குரூப்​கள், கணக்​கு​கள், அட்மின்​கள் மற்​றும் அதனுடன் தொடர்​புடைய அமைப்​பு​களுக்கு எதி​ராக டெலிகி​ராம் நிறு​வனம் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இதுகுறித்து எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகள் குறித்த அறிக்​கையை 15 நாட்​களுக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்பட்​டுள்​ளது.

டெலிகிராமில் சினிமா, தொடர்: 15 நாளில் பதிலளிக்க நோட்டீஸ்
பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டு புகார்: விசாரணைக்கு உத்தரவு, சிசிடிவி கேமராக்கள் ஆய்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in