பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டு புகார்: விசாரணைக்கு உத்தரவு, சிசிடிவி கேமராக்கள் ஆய்வு

பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டு புகார்: விசாரணைக்கு உத்தரவு, சிசிடிவி கேமராக்கள் ஆய்வு
Updated on
1 min read

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலை தொடர்ந்​து, பத்​ரி​நாத் கோயி​லிலும் காணிக்​கை திருடப்பட்டதாக புகார் எழுந்​துள்​ளது.

உத்​த​ராகண்ட் மாநிலத்​தின் 4 முக்​கியப் புனிதத் தலங்​களில் ஒன்றான பத்​ரி​நாத்​தில் உள்ள விஷ்ணு கோயில் உள்​ளது. கடந்த 2025-ல் 51 லட்​சத்​துக்​கும் அதி​க​மான பக்​தர்​கள் இக்​கோ​யிலுக்கு வருகை தந்​துள்​ளனர்.இந்​தக் கோயிலை பத்​ரி​நாத்​-கே​தார்​நாத் கோயில் கமிட்டி (பிகேடிசி) நிர்​வகித்து வரு​கிறது. இந்​நிலை​யில் பிகேடிசி தலை​வரின் தனிப்​பட்ட செய​லா​ளர் மீது பைரவ் சேனா எனும் ஆன்​மிக அமைப்பு தீவிர குற்​றச்​சாட்​டு​களை முன்வைத்துள்ளது.

இது தொடர்​பாக விசா​ரணை கோரி பிகேடிசி​யின் தலைமை நிர்வாக அதி​காரி சோஹன் ரங்​கத்​திடம் பைரவ் சேனா​வின் நிறுவனத் தலை​வர் சந்​தீப் கத்ரி மனு அளித்​துள்​ளார்.

அந்த மனு​வில் பத்​ரி​நாத் கோயில் காணிக்​கை​யில் முறைகேடுகள் மற்​றும் நிதி கையாடல் நடந்​துள்​ள​தாக​வும் எனவே சம்​பந்​தப்​பட்ட ஊழியரின் பங்கு குறித்து விசா​ரணை நடத்​தப்பட வேண்​டும் என்​றும் அவர் கோரி​யுள்​ளார்.

இதுகுறித்து பிகேடிசி தலை​வர் ஹேமந்த் திவேதி கூறுகை​யில், “சமூக ஊடகங்​களில் குறிப்​பிடப்​படும் நபர் உண்​மை​யில் எனது தனிப்​பட்ட செய​லா​ளர் அல்ல. அவர் பத்​ரி​நாத்​-கே​தார்​நாத் கோயில் கமிட்​டி​யின் ஒரு சாதாரண அரசு ஊழியர். இதற்கு முன்பு அவர் மூன்று கோயில் கமிட்​டித் தலை​வர்​களிடம் தனிப்​பட்ட உதவி​யாள​ராகப் பணி​யாற்​றி​யுள்​ளார். இவர் மீதான குற்​றச்​சாட்​டு​கள் உண்​மை​யானவை எனத் தெரிந்​தால் அவர் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும்.

இந்த விசா​ரணைக்​காக ஒரு குழுவை அமைக்​க​வும் கோவில் நிர்​வாகம் உத்​தர​விட்​டுள்​ளது. அப்​பு​காரின் அடிப்​படை​யில், பத்​ரி​நாத் கோயில் வளாகம் மற்​றும் அதனைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் உள்ள சிசிடிவி கேம​ராக்​களின் காட்​சிகளும் ஆய்வு செய்​யப்​பட்டு வரு​கின்​றன” என்​றார்.

இந்த விவ​காரத்​தில் பத்​ரி​நாத்​-கே​தார்​நாத் கோயில் ஊழியர்​கள் கூட்​டமைப்​பும் சில முன்​னெடுப்​பு​களை மேற்​கொண்​டுள்​ளது. இச்​சம்​பவம் குறித்து வெளிப்​படை​யாக விசா​ரணை நடத்​தப்பட வேண்​டும் என்று சங்​கத்​தின் தலை​வர் விஜேந்​திர பிஷ்ட், கோயில் குழு​வுக்கு கடிதம் அனுப்​பி​யுள்​ளார்.

பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டு புகார்: விசாரணைக்கு உத்தரவு, சிசிடிவி கேமராக்கள் ஆய்வு
பேட்டரி வாகனங்களுக்கு மக்கள் மாற வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in