

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட, ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகரீதியான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டண அறிவிப்பை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அஞ்சன் தத்தா தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘புதிய யுபிஐ கட்டணங்களால் வணிகர்கள் இந்தக் கூடுதல் செலவை நுகர்வோர் மீது சுமத்துவர். எனவே இது சாமானிய மக்களைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் புதிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.