

கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே.மாணி
கோட்டயம்: கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே.மாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 20,000 ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டு, இந்த பணி நிரந்தர நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.
இதுகுறித்து கேரள கல்வி அமைச்சர் வி.சிவன் குட்டி நேற்று கூறும்போது, “மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர் நியமன ஒப்புதல் தொடர்பான நீண்ட கால சட்டச் சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.