ஜனநாயகத்தை காக்கவே அசாம் மக்கள் வாக்களிக்கின்றனர் அகில் கோகோய் கருத்து

ஜனநாயகத்தை காக்கவே அசாம் மக்கள் வாக்களிக்கின்றனர் அகில் கோகோய் கருத்து
Updated on
1 min read

குவாஹாட்டி: பாசிச பாஜக அரசிடமிருந்து ஜனநாயகத்தை காப்பாற்றவே அசாம் மக்கள் வாக்களித்து வருகின்றனர் என்று ரைஜோர் தளம் கட்சியின் தலைவர் அகில் கோகோய் கூறினார்.

அசாமின் சிவசாகர் தொகுதி எம்எல்ஏ அகில் கோகோய், சிவசாகரில் மீண்டும் போட்டியிடுகிறார். இங்குள்ள ஒரு வாக்குச்சாவடியில் நேற்று அவர் வாக்கு செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அசாம் மாநில மக்கள் தற்போதைய அரசை மாற்றும் நோக்கத்தில் வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வருகின்றனர். முதல்வர் ஒரு பாசிசவாதியாக உள்ளார். பாசிச பாஜக அரசிடமிருந்து ஜனநாயகத்தை காப்பாற்றவே அசாம் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

பாஜக தனது ஆட்சிக் காலத்தில் பல மலிவான செயல்களை செய்துள்ளது. இம்முறை, எதிர்க்கட்சிகள் எளிதாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். சிவசாகர் தொகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

சிவசாகரில் கோகோய்க்கு எதிராக பாஜக சார்பில் முன்னாள் எம்எல்ஏ குஷல் டோவாரியும் கூட்டணிக் கட்சி சார்பில் அம்குரி தொகுதி எம்எல்ஏ பிரதீப் ஹசாரிகாவும் போட்டியிடுகின்றனர்.

ஜனநாயகத்தை காக்கவே அசாம் மக்கள் வாக்களிக்கின்றனர் அகில் கோகோய் கருத்து
புதுச்சேரி வஉசி பள்ளி வாக்குச்சாவடியில் பூக்கள் கொடுத்து வரவேற்ற பெண் ரோபோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in