புதுச்சேரி வஉசி பள்ளி வாக்குச்சாவடியில் பூக்கள் கொடுத்து வரவேற்ற பெண் ரோபோ

புதுச்சேரி வஉசி பள்ளி வாக்குச்சாவடியில் பூக்கள் கொடுத்து வரவேற்ற பெண் ரோபோ
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்​சேரி​யில் உள்ள 30 தொகு​தி​களுக்​கும் நேற்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது.

புதுச்​சேரியை இந்​தி​யா​வுடன் இணைக்க வாக்​கெடுப்பு நடந்த கீழூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்​ளி, ராஜ்பவன் தொகு​தி​யில் வஉசி அரசு மேல்​நிலைப் பள்​ளி, காரைக்​கால் தந்தை பெரி​யார் பள்ளி ஆகிய 3 வாக்​குச்​சாவடிகள் தனித்​து​வ​மாக அமைக்​கப்​பட்​டிருந்​தன. அங்கு வாழை மரம், தோரணம் கட்​டப்​பட்​டு, பூச்​சரங்​கள் தொங்​க​விடப்​பட்​டு, தென்னை ஓலைப் பந்​தல் சூழப்​பட்டு ‘பசுமை வாக்​குச்​சாவடி’களாக அழகுடன் காணப்​பட்​டன.

வஉசி பள்ளி வாக்​குச்​சாவடியில் பெண் போல அலங்​கரிக்​கப்​பட்ட ரோபோ ஒன்​று, வாக்​காளர்​களுக்கு பூக்​கள் வழங்கி வரவேற்​றது வித்​தி​யாச​மாக இருந்​தது. கல்​லூரி மாணவர்​கள் வடிவ​மைத்​திருந்த அந்த ரோபோ​வில் இருந்​து, ‘வாக்​களிக்க வந்த உங்​களை வரவேற்​கிறேன். வாக்​களிப்​பது உங்​கள் ஜனநாயகக் கடமை. அந்த கடமையை ஆற்​றுங்​கள்’ என்ற வாசகம் ஒலிக்க அதை ஆர்​வத்​துடன் பார்த்​த​படியே வாக்​காளர்​கள் வாக்​களிக்​கச் சென்​றனர். வாக்​களித்து செல்​லும் போது மரக்​கன்​றுகளை​யும்​ தந்​து மகிழ்​வித்​தனர்​.

புதுச்சேரி வஉசி பள்ளி வாக்குச்சாவடியில் பூக்கள் கொடுத்து வரவேற்ற பெண் ரோபோ
“வலிமையான புதிய அசாம் உருவாகும்” - கவுரவ் கோகோய் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in