அமெரிக்கா, ஈரான் இடையிலான போரை இந்தியாவால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து

மோகன் பாகவத்

மோகன் பாகவத்

Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் இடையி​லான போரை இந்​தி​யா​வால் மட்​டுமே தடுத்து நிறுத்த முடி​யும் என்று ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் தெரி​வித்​துள்​ளார்.

மகா​ராஷ்டி​ரா​வின் நாக்​பூரில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்​பின் அலு​வல​கத்​துக்கு நேற்று அடிக்​கல் நாட்​டப்​பட்​டது. இந்த விழா​வில் ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் பேசி​ய​தாவது: மனித நேயத்​தின் அடிப்​படை​யில் இந்​தியா செயல்​பட்டு வரு​கிறது. நமது இந்து மதம், ஒற்​றுமை, மனித நேயம், சகோ​தரத்​து​வத்தை வலி​யுறுத்​துகிறது. தற்​போது மேற்கு ஆசி​யா​வில் (அமெரிக்கா - ஈரான்) போர் தீவிரமடைந்து வரு​கிறது. இந்த போரை இந்​தி​யா​வால் மட்​டுமே தடுத்து நிறுத்த முடி​யும் என்று பல்​வேறு நாடு​கள் உறு​தி​யாக நம்​பு​கின்​றன. இது​தான் இந்​தி​யா​வின் பலம்.

உலகம் முழு​வதும் பல்​வேறு போர்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. ஆனால் இந்​தியா எப்​போதும் நடுநிலை​யுடன் செயல்​பட்டு வரு​கிறது. மனிதநேய சட்​டத்தை இந்​திய மக்​கள் பின்​பற்​றுகின்​றனர். ஆனால் பெரும்​பாலான நாடு​கள் காட்​டாட்சி சட்​டத்தை பின்​பற்றி வரு​கின்​றன. சுயநலம், ஆதிக்க மனப்பான்மை உள்​ளிட்ட காரணங்​களால் உலகின் பல்​வேறு பகு​தி​களில் பிரச்​சினை​கள் எழுந்​துள்​ளன. உலகம் ஒரே குடும்​பம் என்ற இந்​தி​யா​வின் கொள்​கையை உலக நாடு​கள் பின்​பற்​றி​னால் அனைத்து பிரச்​சினை​களுக்​கும் எளி​தாக தீர்வு காண முடி​யும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

மராத்தி நாளிதழுக்கு மோகன் பாகவத் அளித்​துள்ள பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆர்​எஸ்​எஸ் அமைப்பு 46 பிராந்​திய அலு​வல​கங்​களு​டன் செயல்​பட்டு வந்​தது. இப்​போது இந்த எண்​ணிக்கை 86 ஆக அதி​கரிக்​கப்​பட்டுள்​ளது. எங்​களது செயல்​பாடு​களில் எந்த மாற்​ற​மும் இல்​லை. சமு​தா​யத்​தில் ஒற்​றுமையை ஏற்​படுத்​த​வும், நட்​புறவை மேம்படுத்​த​வும் தொடர்ந்து பாடு​படு​கிறோம்.

எங்​கள் தொண்​டர்​கள் வீடு, வீடாக சென்று மக்​களை சந்​தித்து வரு​கின்​றனர். சமூக வலை​தளங்​களி​லும் நாங்​கள் கால் பதித்து உள்​ளோம். ஏராள​மான யூடியூபர்​கள், சமூக வலைதள பிரபலங்​களு​டன் தொடர்​பில் உள்​ளோம். சமூக வலை​தளங்​கள் வாயி​லாக எங்​களது கொள்​கைகளை மக்​களிடம் பரப்பி வரு​கிறோம்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>மோகன் பாகவத்</p></div>
“கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராக உள்ளனர்” - ராகுல் காந்தி கணிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in