பஹல்காம் தாக்குதல் வழக்கு: ஹபீஸ் சயீதுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு

லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத்

லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத்

Updated on
1 min read

ஜம்மு: பஹல்​காம் தாக்​குதல் வழக்கு குற்​றப்​பத்​திரி​கை​யில் இடம்​பெற்​றுள்ள ஹபீஸ் சயீதுக்கு எதி​ராக என்ஐஏ சிறப்பு நீதி​மன்​றம் ஜாமீனில் வெளிவர முடி​யாத கைது உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

கடந்த ஆண்டு ஏப்​ரல் 22-ம் தேதி, தெற்கு காஷ்மீரின் பஹல்​காமில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய கொடூர தாக்​குதலில் சுற்​றுலாப் பயணி​கள் உட்பட 26 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கில் பாகிஸ்​தானில் வசிக்​கும் லஷ்கர்​-இ-தொய்பா அமைப்பின் தலை​வர் ஹபீஸ் சயீதுக்கு (76) எதி​ராக கூடு​தல் குற்றப் ​பத்​திரி​கையை ஜம்​மு​வில் உள்ள சிறப்பு நீதி​மன்​றத்​தில் என்ஐஏ கடந்த 6ம் தேதி தாக்​கல் செய்​தது.

மேலும் இந்த வழக்​கில் அடுத்​தகட்ட நடவடிக்​கைகளை தொடங்க ஹபீஸ் சயீதுக்கு எதி​ராக ஜாமீனில் வெளி வர முடி​யாத கைது உத்தரவு பிறப்​பிக்க வேண்​டும் என்று என்ஐஏ கோரிக்கை விடுத்தது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பிறப்​பித்​துள்ள உத்​தர​வில், “நியாய​மான, முழு​மை​யான மற்​றும் பயனுள்ள விசா​ரணைக்கு குற்​றம் சாட்​டப்​பட்​ட​வரை (சயீத்) கைது செய்​து, காவலில் எடுத்து விசா​ரணை நடத்​து​வது அவசி​ய​மாகும். எனவே அவருக்கு எதி​ராக ஜாமீனில் வெளிவர முடி​யாத கைது வாரண்ட் பிறப்​பிக்​கப்​பட்​டு, சட்​டப்​படி அதை செயல்​படுத்​து​வதற்​காக ஜம்மு என்ஐஏ துணைத் தலைமை அதி​காரிக்கு (டிஜஜி) அனுப்பி வைக்​கப்​படு​கிறது” என்​று கூறப்​பட்​டுள்​ளது.

இந்​தியா மற்​றும் அமெரிக்​கா​வால் சர்​வ​தேச தீவிர​வா​தி​யாக அறிவிக்​கப்​பட்ட ஹபீஸ் சயீத், 2008ம் ஆண்டு மும்பை தீவிர​வாத தாக்​குதலின் மூளை​யாக கருதப்​படு​கிறார். சயீ​தின் பெயர் அவரது தனிப்​பட்ட முறை​யிலும், தடை செய்​யப்​பட்ட லஷ்கர்​-இ-தொய்​பா, தி ரெசிஸ்​டன்ஸ் ஃபிரண்ட் ஆகிய அமைப்​பு​களின் தலை​வர் என்ற முறை​யிலும் குற்​றப்​ பத்​திரி​கை​யில் சேர்க்கப்பட்டுள்​ளது.

<div class="paragraphs"><p><em>லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத்</em></p></div>
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு 20% கட்டண அறிவிப்பு வாபஸ்: ஒரே நாளில் முடிவை மாற்றிய ட்ரம்ப்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in