நொய்டா போராட்ட வன்முறைக்கு மூளையாகச் செயல்பட்டது உண்மைதான்: தமிழ்நாட்டில் கைதானவர் ஒப்புதல் வாக்குமூலம்

ஆதித்யா ஆனந்த்

ஆதித்யா ஆனந்த்

Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கவுதம் புத்த நகர் தொழில் மண்​டலங்​களில் பணிபுரி​யும் ஒப்​பந்​தத் தொழிலா​ளர்​கள், நியாயமான ஊதி​யம், சரி​யான நேரத்​தில் சம்​பளம் மற்​றும் பாதுகாப்பான பணிச்​சூழல் கோரி அண்மை​யில் தொடர் போராட்டம் நடத்​தினர். இதில் வன்​முறை வெடித்​தது.

இந்​தப் போராட்டத்​துக்கு மூளை​யாக செயல்​பட்​டதாக ஆதித்யா ஆனந்த் (எ) ரஸ்​தி மீது குற்​றம்​ சாட்​டப்​பட்​டது. தலைமறை​வா​ன ரஸ்தியைப் பற்றி தகவல் தெரி​விப்​பவர்​களுக்கு 1 லட்​சம் ரூபாய் வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

காவல் துறை​யிடம் சிக்​காமல் இருக்க அவர் அடிக்​கடி தனது இருப்​பிடத்தை மாற்​றிக்​கொண்டே இருந்​தார். அவருக்கு எதி​ராக ஜாமீனில் வெளிவர முடி​யாத வாரண்ட் பிறப்​பிக்​கப்​பட்​டு, பல மாநிலங்​களில் தேடு​தல் வேட்டை நடத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், கவுதம் புத்த நகர் காவல் ஆணை​யரகம் மற்​றும் உத்​தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்​படை (STF) இணைந்த குழு, ஆதித்ய ஆனந்​தைத் தமிழ்​நாட்​டின் திருச்​சி​ராப்​பள்ளி ரயில் நிலை​யத்​தில் வைத்து கைது செய்​தது.

அவரிடம் நடத்​திய விசாரணை​யின் போது, நொய்​டா​வில் தொழிலா​ளர் போராட்டத்தின்​ போது ஏற்​பட்ட வன்​முறைக்​கான சதித்​திட்டத்தில் தனக்கு பங்கு இருப்​பதை ஆனந்த் ஒப்​புக் கொண்​டார். இந்​தச் சதித்​திட்​டத்​தின் பின்​னணி​யில் உள்ள பெரிய வலையமைப்​பைக் கண்​டறிய​வும், பிற அம்​சங்​களை ஆராய​வும் அவரை காவலில் எடுத்து வி​சா​ரிக்க உள்​ள​தாகக் காவல்​ துறை தெரி​வித்​துள்​ளது.

<div class="paragraphs"><p><em>ஆதித்யா ஆனந்த்</em></p></div>
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in