28 மாவட்டங்களுடன் ஆந்திர மாநிலத்தின் புதிய வரைபடம் வெளியீடு

28 மாவட்டங்களுடன் ஆந்திர மாநிலத்தின் புதிய வரைபடம் வெளியீடு
Updated on
1 min read

அமராவதி: புதிய ஆந்​திர மாநிலத்​தின் ஒரே மற்​றும் நிரந்தர தலைநக​ராக அமராவ​தியை அறிவிக்​கும் மசோதா நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. இதையடுத்து முதல் முறை​யாக தற்​போது 28 மாவட்டங்கள் கொண்ட புதிய ஆந்​திர மாநிலத்​தின் வரை படத்தை தேசிய விபத்து தடுப்​புத் துறை வெளி​யிட்​டுள்​ளது.

இதில் மாவட்​டங்​களின் எல்​லைகள், வனப்​பகு​தி​கள், சாலைகள், தேசிய நெடுஞ்​சாலைகள் என அனைத்​தும் துல்​லிய​மாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் தொகு​தி​கள் வாரி​யாக​வும் அந்த வரைப்​படம் தெளி​வாக உள்​ளது. இந்த வரைபடத்​தில் அமராவ​தியை தலைநகர​மாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. ஆந்​தி​ரா​வின் பல்​நாடு, குண்​டூர், கிருஷ்ணா மற்​றும் என்​.டி.ஆர். மாவட்​டங்​களில் உள்ள பகு​தி​களை இணைத்து அமராவதி நகரம் என தெள்​ளத்​தெளி​வாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

கடந்த ஜெகன் ஆட்​சி​யில் இருந்த 26 மாவட்​டங்​களு​டன் தற்​போது கூடு​தலாக மார்க்​காபுரம் மற்​றும் போலா​வரம் இணைந்து 28 மாவட்​டங்​களாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

புயல், வெள்​ளம் போன்ற இயற்கை பேரிடரின் போது மாநில, மாவட்ட எல்​லைகள் தெரிய வேண்​டிய அவசி​யம் என்​ப​தால், இந்த வரைபடத்தை முதல் முறை​யாக தேசிய விபத்து தடுப்​புத் துறை தயாரித்​த​தாக கூறப்​படு​கிறது.

28 மாவட்டங்களுடன் ஆந்திர மாநிலத்தின் புதிய வரைபடம் வெளியீடு
குஜராத்தில் ரூ.10 கடன் கொடுக்க மறுத்தவர் கொலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in