

காந்திநகர்: குஜராத்தின் நர்மதா மாவட்டம், பதர்வா கிராமத்தில் ராஜேஷ்பாய் தன்ஜிபாய் தத்வி என்ற மாற்றுத் திறனாளி மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தர்மேந்திரபாய் என்கிற தாமோ (33) என்பவர் அவரை வழிமறித்துள்னர்.
ராஜேஷ்பாயிடம் தனது சொந்த செலவுக்காக ரூ.10 கடன் தருமாறு தர்மேந்திரபாய் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த தர்மேந்திரபாய், ராஜேஷ்பாயை கீழே தள்ளி கழுத்தை நெரித்ததில் ராஜேஷ் பாய் உயிரிழந்தார். இதையடுத்து தர்மேந்திரபாய் கைது செய்யப்பட்டார்.