உத்தர பிரதேச வக்பு வாரியங்களில் புதிய மாற்றங்கள்: நிர்வாகிகள் பதவிக்கு உயர் கல்வி அவசியம்

உத்தர பிரதேச வக்பு வாரியங்களில் புதிய மாற்றங்கள்: நிர்வாகிகள் பதவிக்கு உயர் கல்வி அவசியம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேச சன்னி மற்​றும் ஷியா வக்பு வாரியங்களின் விதி​களில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன. இதன்​படி, அதன் நிர்​வாகி​களாக, உயர் கல்வி பெற்ற முஸ்லிம்களும், முத்​தவல்​லிக்கு பட்​டப்​படிப்​பும் அவ​சி​ய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

மத்​திய அரசு, ‘ஒருங்​கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்​பாடு மற்​றும் வளர்ச்​சிச் சட்டம்,1995’-ஐ அமல்​படுத்​தி​யது. இதனைச் செயல்​படுத்​தத் தேவை​யான விதி​களை உரு​வாக்​குமாறுமாநிலங்​களுக்கு அறிவுறுத்​தப்​பட்​டிருந்​தது. பல வருடங்​களாக எந்த மாநிலமும் கண்​டுகொள்​ளாத இச்​சட்​டத்தை நாட்​டின் முதல் மாநிலமாக உத்தர பிரதேசம் அமலாக்கி உள்​ளது.

உத்​தர பிரதேச அமைச்​சரவை, வக்பு நிர்​வாக விதி​களில் திருத்​தம் செய்​துள்​ளது. இனி, வக்பு சொத்​துகளை நிர்வகிக்கும் பொறுப்பு, உயர்கல்வி பெற்ற முஸ்​லிம் நபர்​களிடம் இருக்​கும்​படி செய்யப்பட்டுள்​ளது. இதற்​காக, ‘உத்​தர பிரதேச ஒருங்​கிணைந்த வக்பு மேலாண்மை, அதி​காரமளித்​தல், திறன் மேம்​பாடு மற்​றும் வளர்ச்சி விதி​கள், 2026’ என்ற சட்​டதிருத்​தத்​துக்கு அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இதன்​படி, இனி மசூதி​களின் ‘முத்​தவல்லி’ (நிர்​வாகி) ஆக வேண்​டு​மானால், பட்​டப்​படிப்பு அவ​சி​யம். இத்​துடன், இந்தி மற்​றும் உருது மொழிகளில் அறிவு பெற்​றிருப்​பது கட்​டாயம். இப்​ப​த​வி​யில் ஒரு​வரை நியமிக்​கும் முன், மாவட்ட ஆட்​சி​யரால் விண்​ணப்​ப​தா​ரரின் ஆவணங்​கள், தகுதி மற்​றும் நடத்தை சரிபார்க்​கப்​பட உள்​ளன. இந்த நடைமுறை தொடங்​கிய 45 நாட்​களுக்​குள், மாவட்ட ஆட்சியர் இது​குறித்த அறிக்​கையை சன்னி மற்​றும் ஷியா மத்​திய வக்பு வாரியங்​களிடம் சமர்ப்​பிக்க வேண்​டும்.

புதிய விதி​களின்​படி, முத்​தவல்​லிகள் ஒவ்​வொரு ஆண்​டும் மார்ச் 1-ம் தேதிக்​குள், அடுத்த நிதி​யாண்​டுக்​கான வரு​மானம், செலவு மதிப்​பீட்டு விவரங்​களை இணை​யதளத்​தில் பதிவேற்ற வேண்டும். சட்​ட​விரோத ஆக்​கிரமிப்​பு​களை அகற்​று​வதற்​கான அறி​விப்​பு​கள், உத்​தரவு​கள், சொத்து மேலாண்​மைத் திட்​டங்​கள், மற்​றும் சன்னி மற்​றும் ஷியா வக்பு வாரியங்​களின் ஆண்டு வரவு-செல​வுத் திட்டங்​கள் ஆகிய​வையும் இந்த இணை​யதளத்​தில் இடம்​பெறும்.

குடும்ப வக்​பு​களுக்கு, பட்​டப்​படிப்பு முடித்​திருக்க வேண்​டும் என்ற நிபந்​தனை பொருந்​தாது. முத்​தவல்லி பத​விக்கு விண்​ணப்​பிப்​பவர்​களுக்கான குறைந்​த​பட்​ச வயது 21். ஏதேனும் ஒரு குற்றத்துக்காக 2 ஆண்​டுகள் அல்​லது அதற்கு மேற்​பட்ட சிறைத் தண்​டனை பெற்​றவர்​கள் தகுதி​யற்​றவர்​கள்.

வக்பு சொத்தை சட்டவிரோதமாக ஆக்​கிரமித்​ததற்​காகத் தண்​டிக்​கப்​பட்​ட​வர்​கள், அல்​லது ஊழல் அல்​லது முறையற்ற நடத்தை காரண​மாக முத்தவல்லி பத​வி​யி​லிருந்து நீக்​கப்​பட்​ட​வர்​கள் இந்​தப் பத​விக்​குத் தகுதி​யற்​றவர்​கள் ஆவர்.

சன்னி மற்​றும் ஷியா வக்பு வாரியங்​களின் தலை​மைச் செயல் அதி​காரி பத​விக்கு, மாநில அரசின் சிறப்​புச் செயலர் அல்​லது அதற்கு இணை​யான அந்​தஸ்​தில் உள்ள ஒரு​வர் நியமிக்கப்படுவார். இப்​ப​த​வி​யின் அதி​கபட்ச பத​விக்​காலம் ஐந்து ஆண்டுகள். தற்​போது, இணைச் செயலர் நிலை​யில் உள்ள அதிகாரி​கள் இந்​தப் பணி​யில் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். தற்​போது உ.பி.யில் 1.65 லட்​சம் வக்பு சொத்​துகள் உள்​ளன.

உத்தர பிரதேச வக்பு வாரியங்களில் புதிய மாற்றங்கள்: நிர்வாகிகள் பதவிக்கு உயர் கல்வி அவசியம்
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி: அரசியல் தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்

X