‘நெட்வொர்க்' வரைபடத்தில் பிழை: மன்னிப்பு கேட்டது நேபாள ஏர்லைன்ஸ்

‘நெட்வொர்க்' வரைபடத்தில் பிழை: மன்னிப்பு கேட்டது நேபாள ஏர்லைன்ஸ்
Updated on
1 min read

புதுடெல்லி: ஒரு நெட்​வொர்க் வரைபடத்​தில் ஜம்மு காஷ்மீரை பாகிஸ்​தானின் ஒரு பகு​தி​யாக காட்​டியதற்​காக நேபாள ஏர்​லைன்ஸ் மன்​னிப்பு கோரி​யுள்​ளது.

இதுகுறித்து ‘எக்​ஸ்’ தளத்​தில் நேபாள ஏர்​லைன்ஸ் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “எங்​கள் சமூக ஊடக சேனல்​களில் சமீபத்​தில் பகிரப்​பட்ட நெட்​வொர்க் வரைபடத்​தில் உள்ள பிழைக்​காக நாங்​கள் மனப்​பூர்​வ​மாக மன்​னிப்பு கோரு​கிறோம்.

அந்த வரைபடத்​தில் சர்​வ​தேச எல்​லைகள் தொடர்​பான வரைபட​வியல் பிழைகள் இருந்​தன. அவை நேபாளம் அல்​லது நேபாள ஏர்​லைன்ஸ் நிறு​வனத்​தின் அதி​காரப்​பூர்வ நிலைப்​பாட்​டைப் பிர​திபலிக்​க​வில்​லை, நாங்​கள் உடனடி​யாக அந்​தப் பதிவை நீக்​கி​விட்​டோம், மேலும் எங்​கள் தகவல்​கள் மிக உயர்ந்த துல்​லிய தரத்​துடன் இருப்​பதை உறு​தி​ செய்ய நடவடிக்கை எடுத்​துள்​ளோம். அந்​தப் பதிவு ஏற்​படுத்​திய மன வருத்​தத்​துக்​கும் வருந்​துகிறோம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

‘நெட்வொர்க்' வரைபடத்தில் பிழை: மன்னிப்பு கேட்டது நேபாள ஏர்லைன்ஸ்
நேபாளத்தில் வேன் விபத்து: 20 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in