

புதுடெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சிஜேபி அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை.
குறிப்பாக எங்கள் அமைப்பை எவ்வாறு விரிவுபடுத்துவது, மக்களின் நலனுக்காக நாம் எடுக்க வேண்டிய பிரச்சினைகளைக் கண்டறிவது மற்றும் இயக்கத்துக்கான வரைபடத்தை உருவாக்குவது குறித்து விவாதிப்போம்.
விரைவில் தேசிய அளவில் பிரச்சாரக் குழு ஒன்றை அமைத்து, ‘மக்கள் என்ன சொல்கிறார்கள்’ (க்யா போல்தி பப்ளிக்) என்ற பெயரில் பிரச்சினைகளைக் கண்டறிவோம். இந்தப் பிரச்சாரத்தின் முதல் கவனம் கல்வியின் மீதே இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சிஜேபி நிர்வாகிகள் இந்நிலையில் சிஜேபி அமைப்பின் தேசிய செயற்குழு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அபிஜித் திப்கேவும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், ஆஷுதோஷ் ரங்காவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.