உதயநிதி காரில் ஏற முயன்ற பழனிசாமி

உதயநிதி காரில் ஏற முயன்ற பழனிசாமி
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வை​ கூட்​டம் நேற்று முடிந்ததும் பேரவை உறுப்​பினர்​கள் அனை​வரும் மதி​யம் 12.30 மணி அளவில் வரிசை​யாகப் புறப்​பட்​டுச் சென்​றனர்.

அப்​போது, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, பேரவை வளாகத்​தில் செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​தார். பின்​னர் அங்கு நிறுத்​தப்​பட்​டிருந்த காரின் கதவைத் திறந்து ஏற முயன்​றார்.

உடனே பாது​காப்​புப் பணி​யில் இருந்த காவலர்​கள் பதறிப்​போய், "சார், இது உதயநிதி ஸ்டா​லினுடையது" என்று தெரி​வித்​தனர். அதைக்​கேட்டு புன்​னகைத்த பழனி​சாமி, அருகே நின்​றிருந்த தனது காரை நோக்​கிச் சென்​றார்.

கடந்த 2022-ம் ஆண்​டும் பேரவை கூட்டத் தொடரின் போதும், உதயநிதியின் காரில் பழனிசாமி தவறுதலாக ஏற முயன்ற சம்பவம் நிகழ்ந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

உதயநிதி காரில் ஏற முயன்ற பழனிசாமி
விவசாயிகளுக்கு ஏமாற்றம் தந்த வேளாண் பட்ஜெட்: பழனிசாமி விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in