டிசிஎஸ் மதமாற்ற விவகாரம்: டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளியுடன் நீடா கானுக்கு தொடர்பு

டிசிஎஸ் மதமாற்ற விவகாரம்: டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளியுடன் நீடா கானுக்கு தொடர்பு
Updated on
1 min read

நாசிக்: மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக் நகரில் டிசிஎஸ் நிறு​வனத்​தின் பிபிஓ அலு​வல​கம் செயல்​படு​கிறது. இந்த நிறு​வனத்​தில் பணி​யாற்​றும் பெண் ஊழியர்​களை, மூத்த அதி​காரி​கள் மிரட்டி பாலியல் வன்​கொடுமை செய்​திருப்​ப​தாக​வும் பல பெண்​களைக் கட்​டாய மதமாற்​றம் செய்​திருப்​ப​தாக​வும் புகார்​கள் எழுந்​துள்​ளன.

இதுதொடர்​பாக டிசிஎஸ் அலு​வல​கத்​தின் 9 பெண் ஊழியர்​கள் அளித்த புகார்​களின் பேரில் 9 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு உள்​ளன. டிசிஎஸ் நிறுவன மூத்த அதி​காரி​கள் தவுசிப் அத்​தர், டேனிஷ் ஷேக், ரசா மேமன், ஷாரூக் குரேசி, ஆசிப் அன்​சா​ரி, ஷபி ஷேக், அஸ்​வினி சனானி ஆகியோர் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்டு உள்​ளனர்.

மதமாற்ற விவ​காரத்​தில் மூளை​யாக செயல்​பட்ட டிசிஎஸ் பெண் அதி​காரி நீடா கான் தலைமறை​வாக உள்​ளார். மகா​ராஷ்டி​ரா​வின் தானே நகரில் பணி​யாற்​றும் அவரது கணவர் இக்​பால் கானிடம், நாசிக் போலீ​ஸார் நேற்று முன்​தினம் விசா​ரணை நடத்​தினர். அப்​போது கடந்த 14-ம் தேதி நீடா கான் வீட்​டில் இருந்து வெளி​யேறிய​தாக​வும் மும்​பை​யில் உள்ள அத்​தை​ வீட்​டில் தங்​கி​யிருப்​ப​தாக​வும் போலீ​ஸாரிடம் இக்​பால் கான் தெரி​வித்​தார். இதன்​பேரில் நாசிக் போலீ​ஸார், மும்​பையில் நீடா கானை தேடினர். அவர் தங்​கி​யிருந்த வீடு பூட்​டிக் கிடந்​தது. இதன்​பேரில் 3 தனிப்​படைகள் மும்பை முழு​வதும் தீவிர தேடு​தல் பணி​யில் ஈடு​பட்டு உள்​ளன.

கடந்த ஆண்டு நவம்​பர் 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே கார் குண்​டு​வெடிப்பு நிகழ்த்​தப்​பட்​டது. இதில் 15 பேர் உயி​ரிழந்​தனர். 20 பேர் படு​கா​யம் அடைந்​தனர். இந்த வழக்கு தொடர்​பாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் மருத்​து​வர் ஷாகின் உட்பட 11 பேர் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர். பெண் மருத்​து​வர் ஷாகின், ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத அமைப்​பின் பெண்​கள் பிரிவு மூத்த தலை​வ​ராக செயல்​பட்டு வந்​தார். அவருடன் நீடா கானுக்கு நெருங்​கிய தொடர்பு இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்டு உள்​ளது.

இதுகுறித்து நாசிக் போலீ​ஸார் கூறிய​தாவது: நாசிக் டிசிஎஸ் அலு​வலக மதமாற்ற விவ​காரத்​தின் ஆணி வேரை கண்​டறிய தீவிர விசாரணை நடத்தி வரு​கிறோம். டெல்லி குண்​டு​வெடிப்பு குற்​ற​வாளி மருத்​து​வர் ஷாகினுடன், நீடாகான் தொடர்​பில் இருந்​துள்​ளார். இரு​வரும் சமூக வலை​தளங்​கள் வாயி​லாக உரை​யாடி உள்​ளனர். இதுதொடர்​பான டிஜிட்​டல்தகவல்​கள் அழிக்​கப்​பட்டு உள்​ளன. அவற்றை மீட்க தொழில்​நுட்ப நிபுணர்​களின் உதவியை நாடி உள்​ளோம்.

எட்டு மாத கர்ப்​பிணி​யாக இருக்​கும் நீடா கான் தொடர்ந்து தலைமறை​வாக இருந்து வரு​கிறார். அவரது கணவர் மற்​றும் குடும்​பத்​தினர் போலீ​ஸாருக்கு தவறான தகவல்​களை அளித்து வரு​கின்​றனர். இந்த வழக்​கில் மகா​ராஷ்டிர தீவிர​வாத தடுப்​புப்பிரிவு போலீ​ஸார் மற்​றும் தேசிய புல​னாய்வு அமைப்​பின்​ உதவியை கோரி உள்​ளதாக​ நாசிக்​ போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

டிசிஎஸ் மதமாற்ற விவகாரம்: டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளியுடன் நீடா கானுக்கு தொடர்பு
மகளிர் மசோதாவை தோற்கடித்து நல்ல முயற்சியை கருவிலேயே அழித்தனர்: பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in