

புதுடெல்லி: மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள சமூக ஊடகச் சட்டம், அரசுக்கு எதிரான விமர்சனங்களை நசுக்குவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டது. இது, அதிகரித்து வரும் மக்கள் போராட்டங்களைக் கண்டு பிரதமர் நரேந்திர மோடி பயப்படத் தொடங்கி விட்டார் என்பதையே காட்டுகிறது என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆம்ஆத்மி கூட்டத்தில் கேஜ்ரிவால் கூறியதாவது: மோடி அரசு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் அல்லது வேறு எந்த சமூக ஊடகத் தளமாக இருந்தாலும், ஒரு பதிவு அல்லது வீடியோவை நீக்குமாறு அரசு கோரினால், அதை 3 மணி நேரத்திற்குள் அந்த நிறுவனம் நீக்க வேண்டும்.
சமீபத்தில் இளைய தலைமுறையினர் நடத்திய போராட்டங்கள் மற்றும் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு பிரதமர் மிகவும் கவலையடைந்துள்ளார். பிரதமர் மோடி இந்த நாட்டு மக்களைக் கண்டு பயப்படுகிறார்; இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களைக் கண்டு அஞ்சுகிறார். ஜந்தர் மந்தர் போராட்டங்களுக்குப் பிறகு அவர் அச்சத்தில் மூழ்கியுள்ளார். இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்.