மளிகைப் பொருட்கள், மருந்துகள் வாங்க பெண்களுக்கு மாதம் ரூ.2,500 கூப்பன்: கேரளாவில் பாஜக வாக்குறுதி

மளிகைப் பொருட்கள், மருந்துகள் வாங்க பெண்களுக்கு மாதம் ரூ.2,500 கூப்பன்: கேரளாவில் பாஜக வாக்குறுதி
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரளா​வில் மளி​கைப் பொருட்​கள், மருந்​துகள் வாங்க பெண்​களுக்கு மாதம் ரூ.2,500 கூப்​பன் வழங்​கப்​படும் என பாஜக வாக்​குறுதி அளித்​துள்​ளது.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பாஜக நேற்று வெளி​யிட்ட தேர்​தல் அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஏழைப் பெண்​கள் மாதந்​தோறும் ரூ.2,500-க்கு மளிகை மற்​றும் மருந்​துப் பொருட்​கள் வாங்​கிக் கொள்​ளும் வகை​யில் ‘பக் ஷய ஆரோக்​கிய சுரக் ஷா’ அட்டை வழங்​கப்​படும். கூடு​தலாக ஏழைக் குடும்​பங்​களின் பெண் தலைவி​கள், கணவரை இழந்​தவர்​கள் மற்​றும் 70 வயதுக்கு மேற்​பட்ட மூத்த குடிமக்​களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்​வூ​தி​யம் வழங்​கப்​படும்.

ஆண்​டு​தோறும் ஓணம் மற்​றும் கிறிஸ்​து​மஸ் பண்​டிகை​யின் போது 2 இலவச எல்​பிஜி சிலிண்​டர் வழங்​கப்​படும். ஒவ்​வொரு வீட்​டுக்​கும் மாதந்​தோறும் 20,000 லிட்​டர் இலவச தண்​ணீர் வழங்​கப்​படும். வேளாண் துறை​யில், ஆதரவு தேவைப்​படும் அனைத்து பயிர்​களுக்​கும் குறைந்​த​பட்ச ஆதரவு விலை நிர்​ண​யிக்​கப்​படும்.

தற்​போதுள்ள நிலம் மற்​றும் வனத்​துறை சட்​டங்​களில் திருத்​தங்​கள் செய்​வதன் மூலம் தோட்ட நிலங்​களில் பல்​வேறு பயிர் சாகுபடி அனு​ம​திக்​கப்​படும்.

எய்ம்ஸ் மருத்துவமனை கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படும். கேரள மக்களுக்கு உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் ரூ.1 லட்சம் என்ற அடிப்படையில் நிறுவனங்களுக்கு சலுகைக் கடன் வழங்கப்படும். விழிஞ்சம் துறைமுகத்தைச் சுற்றிலும் பெரிய தொழில் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மளிகைப் பொருட்கள், மருந்துகள் வாங்க பெண்களுக்கு மாதம் ரூ.2,500 கூப்பன்: கேரளாவில் பாஜக வாக்குறுதி
அடுத்த 3 மாதங்களில் பொது சிவில் சட்டம்: அசாம் தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in