ஹரி​யானாவில் தலைக்​கவசம்​ அணி​யாத 19,603 வாகன ஓட்டிகள்​: மார்ச்​ மாதம்​ மட்டும்​ ரூ.1.9 கோடி வசூலித்​த காவலர்!

ஹரி​யானாவில் தலைக்​கவசம்​ அணி​யாத 19,603 வாகன ஓட்டிகள்​: மார்ச்​ மாதம்​ மட்டும்​ ரூ.1.9 கோடி வசூலித்​த காவலர்!
Updated on
1 min read

குரு​கி​ராம்​: தலைக்​கவசம் அணி​யாமல் இருசக்கர வாக​னம் ஓட்டி சென்​றவர்​களிடம் மார்ச் மாதத்​தில் ரூ.1.9 கோடியை வசூலித்துள்ளார் போக்​கு​வரத்​துக் காவலர்.

ஹரி​யானா மாநிலத்​தில் ஏற்​படும் பெரும்​பாலான விபத்​துகளில் உயி​ரிழப்பு அல்​லது காயங்​கள் ஏற்​படு​வதற்கு தலைக்​கவசம் அணி​யாததே காரண​மாக உள்​ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் சாலை போக்​கு​வரத்து விதி​முறை​கள் குறித்​தும் பாதுகாப்​பான பயணம் குறித்​தும் விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

இந்​நிலை​யில், குரு​கி​ராமில் போக்​கு​வரத்து இணைக் கமிஷன​ராக பிரதீக் கெலாட் நியமிக்​கப்​பட்​டார். அவர் பொறுப்​பேற்ற பிறகு சாலை விதி​களை மீறு​பவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தர​விட்​டார். அதன்​படி, மார்ச் மாதத்​தில் மட்​டும் போக்குவரத்துக் காவலர் ஒரு​வர், தலைக்​கவசம் அணி​யாமல் சென்ற 19,603 பேருக்கு அபராதம் விதித்​துள்​ளார். அதில் ரூ.1.9 கோடி வசூலிக்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்து குரு​கி​ராம் போக்​கு​வரத்​துத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: சாலை விதி​மீறலில் பெரும்​பாலானவை தலைக்கவசம் அணி​யாமல் செல்​வ​தாகவே உள்​ளது. அதைக் கட்டுப்​படுத்த இப்​போது விழிப்​புணர்வு பிரச்​சா​ரம் செய்யப்படுகிறது. பெரும்​பாலான விபத்​துகளில் உயி​ரிழப்பு அல்லது காயம் ஏற்​படு​வதற்கு இரு சக்கர வாகன ஓட்​டிகள் தலைக்​கவசம் அணி​யாமல் இருப்​பதே காரண​மாக உள்​ளது.

சாலைகளில் வாக​னங்​களை ஓட்​டும் போது ஒரு ஒழுங்​கு​முறை, ஒழுக்​கத்தை பின்​பற்ற வேண்​டும். தற்​போது விதி​மீறலில் ஈடுபடும் வாகன ஓட்​டிகளிடம் அபராதம் வசூலிக்​கப்​படு​கிறது. இது வரும் மாதங்​களி​லும் தொடரும். அபராதம் மட்​டுமே வாகன ஓட்டிகளிடம் மாற்​றத்தை கொண்டு வராது.

எனவே, மெட்ரோ ரயில் நிலை​யங்​கள், ரயில் நிலை​யங்​கள், பள்ளி, கல்​லூரி​கள், ஆட்டோ - டாக்ஸி சங்​கத்​தினர், சாலை சந்திப்பு​கள், அலு​வல​கங்​கள் போன்ற முக்​கிய​மான இடங்​களில் தீவிர விழிப்​புணர்​வு பிரச்​​சா​ரங்​கள்​ செய்​து வரு​கிறோம்​. அதேபோல்​, சிறு​வர்​களிடம்​ ​வாக​னங்​களை கொடுக்​​காதீர்​கள்​ என்று பெற்​றோர்​களை வலி​யுறுத்​தி வரு​கிறோம்​. இவ்​​வாறு போக்கு​வரத்​துத்​ துறை அதி​காரி​கள்​ கூறினர்​.

ஹரி​யானாவில் தலைக்​கவசம்​ அணி​யாத 19,603 வாகன ஓட்டிகள்​: மார்ச்​ மாதம்​ மட்டும்​ ரூ.1.9 கோடி வசூலித்​த காவலர்!
வெறும்​ 400 ரூபாய்​ கடனை திருப்​பி தராத​தால்​ இளைஞரை கொன்​று வீடியோ வெளி​யீடு: டெல்​லியில்​ 3 சிறு​வர்​கள்​ கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in