

மும்பை: மகாராஷ்டிராவில் 2026-ம் ஆண்டுக்கான ஆரியர் தகுதித் தேர்வு இன்று (ஜூன் 28) நடைபெற இருந்தது. இந்நிலையில், வினாத்தாள் தொடர்பான ஆவணங்களை பிவாண்டி போலீஸார் கைப்பற்றினர்.
இதையடுத்து இன்று நடைபெற இருந்த 'டெட்' தேர்வை ஒத்திவைக்க தேர்வாணையம் முடிவு செய்தது. இதுதொடர்பான அறிவிப்பை மகாராஷ்டிர மாநில தேர்வு கவுன்சில், தேர்வுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பு நேற்று வெளியிட்டது. ‘‘வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.