அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேட்டில் கைதானவர் ரூ.40 லட்சத்துக்கு வீடு வாங்கியது அம்பலம்

அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேட்டில் கைதானவர் ரூ.40 லட்சத்துக்கு வீடு வாங்கியது அம்பலம்
Updated on
1 min read

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் நன்​கொடை​ முறைகேட்டில் கைது செய்​யப்பட்டவர்​களில் ஒரு​வர் ரூ.40 லட்​சத்துக்கு வீடு வாங்​கி​யுள்​ளது அம்​பல​மாகி​யுள்​ளது.

உத்தர பிரதேசத்​தி​லுள்ள அயோத்தி ராமர் கோயில் ( ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்​ரா) அறக்​கட்​டளைக்​குப் பக்​தர்​கள் அளித்த காணிக்​கை​யில் ரூ.7 கோடிக்​கும் அதி​க​மான பணத்தை அங்கு பணிபுரிந்த ஊழியர்​கள் கையாடல் செய்​த​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இந்​நிலை​யில் அறக்​கட்​டளை​யின் பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராய் மற்​றும் அறங்​காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்​களது பதவி​களை அண்​மை​யில் ராஜி​னாமா செய்​தனர். கோயிலுக்கு வந்த நன்​கொடை நிதி​யில் முறை​கேடு நடந்​த​தாக எழுந்த புகாரைத் தொடர்ந்​து, குற்​றத்​துக்கு தார்​மீகப் பொறுப்​பேற்று இந்த ராஜி​னா​மாவை அளித்​துள்​ளனர். இதுதொடர்​பாக கோயி​லில் பணத்தை எண்​ணும் பணி​யில் ஈடு​பட்ட ஊழியர்​கள் உட்பட 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில் கைதான 8 பேரில் ஒரு​வ​ரான அனுகல்ப் மிஸ்ரா என்​பவர் ரூ.40 லட்​சத்துக்கு வீடு வாங்​கி​யது தெரிய வந்துள்ளது. இதுதொடர்​பாக அனுகல்ப் மிஸ்​ரா​வின் சகோ​தரி கூறும்​போது, “எனது சகோ​தரர் அனுகல்ப் மிஸ்ராவை சிக்கவைக்க சதி நடந்​துள்​ளது. 2 ஆண்​டு​களுக்கு முன்பு வீடு வாங்​கியது உண்​மை​தான். அவர் தவறிழைக்​க​வில்லை என்​பதே உண்​மை. எங்​களது அத்தை நேஹா மிஸ்ரா கூறி​யுள்ள குற்​றச்​சாட்​டு​களில் உண்​மை​யில்​லை. நேஹா மிஸ்​ரா​வுக்​கும் எங்​களுக்​கும் கடந்த சில ஆண்​டு​களாக எந்​தத் தொடர்​பும் இல்​லை. அவருடன் எங்​களுக்​குச் சட்​டரீ​தி​யான வழக்கு ஒன்று நிலு​வை​யில் உள்​ளது. அதனால்​தான் அவர் இந்த வழக்​கில் எங்​களை சிக்க வைக்க விரும்​பு​கிறார். அவர் இங்கு வசிப்​பதும் இல்​லை, அவருக்​கும் எங்​களுக்​கும் எந்​தச் சம்​பந்​த​மும் இல்​லை’’ என்​றார்.

அனுகல்ப் மிஸ்​ரா​வின் அத்தை நேஹா மிஸ்ரா கூறியதாவது: அனுகல்ப் மிஸ்​ரா, ராமர் கோயில் அறக்​கட்​டளை​யில் வேலைக்​குச் சேரு​வதற்கு முன்​பாக அவர்​களது பொருளா​தார நிலைமை மோச​மாக இருந்​தது. ஆனால், சில ஆண்​டு​களில் அவரது வாழ்க்கை முறையே மாறி​விட்​டது. அயோத்​தி​யில் அவர் வீடு வாங்கி​னார்.

அவரது தந்​தை, விலை​யுயர்ந்த பொருட்​களை​யும், வாகனத்தையும் வாங்​கி​யுள்​ளார். இந்த வழக்​கில் கைதாகி​யுள்ள 8 பேரில் ஒரு​வ​ரான லவ்​குஷ் மிஸ்ரா என்​பவரும் ரூ.40 லட்​சம் மதிப்புள்ள சொத்​துகளை வாங்​கி​யுள்​ளார்.

மேலும், ஒரு பெரிய வீட்​டை​யும் அவர் தற்​போது கட்டி வரு​கிறார். திடீரென இவ்​வளவு பணம் வந்து எப்​படி? அதைத்​தான் நான் கேட்​கிறேன். தீவிர வி​சா​ரணை​யின் மூலம் இந்​த உண்​மை​கள்​ அனைத்​தும்​ வெளி​யே வரவேண்​டும்​. இவ்வாறு நேஹா கூறினார்.

அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேட்டில் கைதானவர் ரூ.40 லட்சத்துக்கு வீடு வாங்கியது அம்பலம்
நாக் அவுட் சுற்றில் நுழைந்து கேப் வெர்டே அணி சாதனை | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in