ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு

ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு
Updated on: 
1 min read

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியானது. ஆந்திர மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அனில் சந்திரா புனேட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், ‘‘மாநிலத்தில் உள்ள 13 மாநகராட்சிகள், 77 நகராட்சிகள் மற்றும் 10 பஞ்சாயத்துகளுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இம்மாதம் 18-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை 21-ம் தேதிக்குள் வாபஸ் பெறலாம்.

அக்டோபர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறும். 30-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆந்திராவில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸ் ஆக அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in