ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸ் ஆக அறிவிப்பு

அதிகபட்சமாக ரூ.17,951 போனஸ்
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸ் ஆக அறிவிப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: தீபாவளிப் பண்டிகைக்காக ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

தீபாவளி, தசரா, துர்கா பூஜை பண்​டிகைக் காலத்தை முன்னிட்டு ரயில்வே ஊழியர்​களுக்கு ஒவ்​வோர் ஆண்​டும் போனஸ் வழங்​கப்​படும்.

இந்​நிலை​யில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​தது. அதன்படி சுமார் 11.40 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அளிக்க ரூ.2,009 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ரூ.17,951 போனஸ்

இதன்மூலம் தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்​களுக்கு நிகரான ஊதி​யத்தை போனஸாக வழங்கப்படும். அதிகபட்சமாக ஓர் ஊழியர் ரூ.17,591 வரை பெறக்கூடும்.

இந்த தீபாவளி போனஸ் ரயில்வேயில் பணி​யாற்​றும் தண்ட​வாளப் பராமரிப்​பாளர்​கள், ஓட்​டுநர்​கள், கார்​டு​கள், ஸ்டேஷன் மாஸ்​டர்​கள், மேற்​பார்​வையாளர்கள், தொழில்​நுட்ப ஊழியர்​கள் மற்​றும் உதவி​யாளர்கள், ரயில்வே அமைச்சக ஊழியர்​கள் மற்​றும் இதர சி பிரிவு தொழிலா​ளர்​களுக்கு வழங்​கப்​படும். 

வழக்கம்போல் துர்கா பூஜை, தசரா பண்டிகை விடுமுறைக்கு முன்னதாக இந்த போனஸ் வரவு வைக்கப்படும் எனத் தெரிகிறது.

ரயில்வே ஊழியர்களை ஊக்கப்படுத்தி இன்னும் சிறப்பாக செயல்படவைக்கும் நோக்கத்தில் இந்த போனஸ் வழங்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், 2025- 2026-ம் ஆண்டில் ரயில்வே 1670 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளதோடு, 740 கோடி பயணிகளையும் கையாண்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸ் ஆக அறிவிப்பு
Call Me Chihiro: ‘அன்பென்னும் மழை’ சிஹிரோ | திரை தேவதைகள் 39

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in