தாயைக் கொன்ற வழக்கில் சட்டக் கல்லூரி மாணவி கைது: தந்தை கொலையிலும் சதி?

தாயைக் கொன்ற வழக்கில் சட்டக் கல்லூரி மாணவி கைது: தந்தை கொலையிலும் சதி?
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூர் நீதி​மன்​றத்​தில் பணி​யாற்றி வந்த விஜய் சர்​மா, கடந்த ஆண்டு உடல்​நலக் குறை​வால் உயி​ரிழந்​தார். அதைத் தொடர்ந்​து, கருணை அடிப்​படை​யில் அவரது மனைவி நீரஜ் சர்​மாவுக்கு அதே நீதி​மன்​றத்​தில் எழுத்​தர் பணி வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், கடந்த ஜூலை 3-ம் தேதி நீரஜ் சர்மா மீது ஸ்கார்​பியோ கார் மோதி​ய​தில் அவர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தார். இதுதொடர்​பான போலீஸ் விசா​ரணை​யில், தாயின் அரசு வேலை​யை​யும், குடும்​பச் சொத்​துகளை​யும் கைப்​பற்​றும் நோக்​கில், அவரது மகள் ஆயுஷி இந்த கொடூரச் செயலில் ஈடு​பட்​டது தெரிய வந்​தது.

இதையடுத்து, சட்​டப் படிப்​பின் இறு​தி​யாண்டு மாண​வி​யான ஆயுஷி உட்பட 6 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். இதனிடையே, கடந்த ஆண்டு மர்​ம​மான முறை​யில் உயி​ரிழந்த தனது தந்​தையை​யும் அவரே கொலை செய்​திருக்​கலாம் என்று மாண​வி​யின் தாய் மாமன் தற்​போது சந்​தேகம் தெரி​வித்​துள்​ளார்.

தாயைக் கொன்ற வழக்கில் சட்டக் கல்லூரி மாணவி கைது: தந்தை கொலையிலும் சதி?
நியூஸி. செல்கிறது இந்திய கால்பந்து அணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in