கடல்வழியாக தாக்குதல் நடத்த லஷ்கர் - இ - தொய்பா திட்டம்: சார்னா தீவில் சுற்றுலாப் போர்வையில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி

கடல்வழியாக தாக்குதல் நடத்த லஷ்கர் - இ - தொய்பா திட்டம்: சார்னா தீவில் சுற்றுலாப் போர்வையில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி
Updated on: 
1 min read

புதுடெல்லி: பாகிஸ்தானின் பாது​காப்​பில் இயங்​கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு, கடல்​வழித் தாக்​குதலுக்​குத் திட்​ட​மிட்டு வருகிறது. இதற்​காக, அதன் தீவிர​வாதி​களுக்கு கராச்​சி​யி​லிருந்து சுமார் 50 கிலோமீட்​டர் தொலை​வில் உள்ள சார்னா தீவில், சுற்றுலாப் போர்​வை​யில் பயிற்சி அளிக்​கப்​படு​கிறது.

அரபிக் கடலில், சிந்து மற்​றும் பலுசிஸ்​தான் மாகாணங்​களின் எல்லைக்கு அரு​கில் சார்னா தீவு அமைந்​துள்​ளது. இது மக்​கள் நடமாட்​டம் மிகக் குறைவான ஒரு சிறிய பாறைத் தீவாகும். அந்​த​மான் நிக்​கோபார் தீவு​களைப் போல, சார்​னா​வும் தெளிவான நீர், பவளப்​பாறைகளைக் கொண்​டுள்​ளது. இது சுற்​றுலாப் பயணிகள் மற்​றும் டைவிங் ஆர்​வலர்​களிடையே வணிக ரீதி​யான ஸ்கூபா டைவிங், ஸ்​நோர்​கெலிங் (மூச்​சுக்​குழாய் நீச்​சல்) மற்​றும் நீர் விளை​யாட்​டுகளுக்​குப் பிரபலமான இட​மாக உள்​ளது.

எனவே, சுற்​றுலா என்ற பெயரில் சார்னா தீவு, லஷ்​கர்-இ-தொய்​பாவின் ஒரு மறைமுகத் தளமாக உரு​வாகி வரு​கிறது. ‘தாவா மெரைன் விங்’ (கடல்​வழித் தாக்​குதல் பிரிவு) அல்​லது ‘சதா-ஏ-ஹுரியத்’ என்​பதே லஷ்​கர்-இ-தொய்​பாவின் இந்​தப் புதிய பிரிவின் பெயராகும். இப்​பி​ரி​வின் தீவிர​வாதி​கள் சார்னா தீவைச் சுற்​றியுள்ள கடல் பகுதி​யில் ஸ்கூபா டைவிங், போர்​முறை நீச்​சல் மற்​றும் நீருக்​கடி​யி​லான செயல்​பாடுகள் குறித்த பயிற்​சிகளைப் பெற்று வரு​கின்​றனர்.

இவற்​றைச் சாதா​ரண சுற்​றுலா டைவிங் நட​வடிக்​கை​யாகக் காட்டிக்​கொள்​வ​தால், பயிற்​சி​யில் ஈடு​படு​பவர்​கள் அப்​பகுதி​யில் உள்ள பொது​மக்​களு​டன் எளிதாகக் கலந்​து​விடு​கின்​றனர். ‘பாகிஸ்​தான் மர்​கசி முஸ்​லிம் லீக்’ அமைப்​பின் உறுப்​பினர்​கள் இந்​தப் பயிற்​சியை நடத்து​கின்​றனர். இதிலும் லஷ்​கர் மூத்த உறுப்பினர்​கள் செயல்​பட்டு வரு​கின்​றனர்.

இந்​தத் தகவலை நேரடி​யாக அறிந்த வட்​டாரங்​களும், பாது​காப்பு அமைப்​பு​களிடையே பரிமாறப்​படும் உளவுத்​துறை அறிக்​கைகளும் உறுதிப்​படுத்து​கின்​றன.

சார்னா தீவானது கராச்சி துறைமுகம், பாகிஸ்​தான் கடற்​படைத் தளங்​கள் மற்​றும் அரபிக் கடலில் உள்ள முக்​கிய​மான கப்​பல் போக்​கு​வரத்​துப் பாதைகளுக்கு அரு​கில் அமைந்​துள்​ளது.

இது கடல்​சார் நாசவேலைகள், கடல் வழி​யாக ஊடுரு​வல் அல்​லது 2008 நவம்​பர் 26-ல் மும்​பையில் நடத்​தப்​பட்​டது போன்ற தாக்​குதல்​களுக்​கான பயிற்​சி​யாக இருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்துள்ளது. நீண்ட கடற்கரையைக் கொண்ட இந்தி யாவை குறிவைத்து இந்த முயற்சியில் தீவிரவாதிகள் இறங்கியுள்ளதால் இந்திய கடலோர பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடல்வழியாக தாக்குதல் நடத்த லஷ்கர் - இ - தொய்பா திட்டம்: சார்னா தீவில் சுற்றுலாப் போர்வையில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி
தீபாவளி நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரம்: உதவி ஆய்வாளர், சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் படுகொலை

X