தீபாவளி நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரம்: உதவி ஆய்வாளர், சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் படுகொலை

எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிவாரண உதவி அறிவித்தார் முதல்வர் விஜய்
தீபாவளி நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரம்: உதவி ஆய்வாளர், சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் படுகொலை
Updated on: 
3 min read

சென்னை: தீபாவளி தினமான நேற்று முன்​தினம் தமிழகத்​தின் பல்​வேறு பகுதி​களில் நடந்த நிகழ்​வு​களில் காவல் சிறப்பு உதவி ஆய்​வாளர் உட்​பட 13 பேர் கொலைசெய்யப்​பட்​டுள்​ளனர்.

தேனி பங்​களாமேட்​டில் உள்ள டிஎஸ்பி அலு​வல​கத்​தில் சிறப்பு சார்பு ஆய்​வாளராக பணி​யாற்றி வந்​தவர் செந்​தில்​குமார் (57). பழனிசெட்​டிபட்டி காவல்​நிலைய எஸ்ஐ.யான இவர், மாற்று பணி​யாக டிஎஸ்பி. அலு​வல​கத்​தில் பணிபுரிந்​தார். தீபாவளியன்று பணி முடித்​து​விட்டு இரவு 10.30 மணிக்கு வீட்​டுக்கு சென்று கொண்​டிருந்​தார்.

வழி​யில் சமதர்​மபுரம் பிரதான சாலை​யில் மதுபோதையில் சில இளைஞர்​கள் அதிக சத்​தம் எழுப்​பும் பட்​டாசுகளை தொடர்ந்து வெடித்து, அதனை ரீல்​ஸ்களாக எடுத்து கூச்​சலிட்​டுக் கொண்​டிருந்​தனர். அவ்​வழியே சென்ற செந்​தில்​குமார், இளைஞர்​களை கண்​டித்​துள்​ளார். சீருடை​யில் இல்​லாததால், அவர் கூறியதை இளைஞர்​கள் கண்​டுகொள்​ளவில்லை. உடனே செந்​தில்​குமார், கண்ட்​ரோல் ரூமுக்கு தகவல் தெரி​வித்​து​விட்டு அவர்​களின் செயல்​பாடுகளை வீடியோ எடுக்​கத் தொடங்​கினார்.

இத​னால் ஆத்​திரமடைந்த இளைஞர்​கள் செந்​தில்​குமாரை சர​மாரியாக தாக்​கினர். இதில் நிலைகுலைந்து மயங்கி விழுந்த அவரை அக்​கம் பக்​கத்​தினர் மீட்டு, அரு​கிலுள்ள தனியார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அவரது உடல்​நிலை மோசமடைந்​ததால் உடனடி​யாக தேனி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். ஆனால், வழி​யிலேயே செந்​தில்​குமார் உயி​ரிழந்​தார்.

இந்தக் கொலை தொடர்பாக சென்னை போரூரைச் சேர்ந்த மகேஸ்வரன் (22), தேனி சிவராம் நகரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் சூரியமூர்த்தி (24), சமதர்மபுரத்தைச் சேர்ந்த தீபன்ராஜ் (20), பரத்பிரனேஷ் (21), ஆகாஷ் (23), கவுதம் (22) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். எஸ்.எஸ்.ஐ.யின் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

முதல்​வர் விஜய் வெளி​யிட்​டுள்ள இரங்​கல் செய்​தி​யில், சிறப்பு எஸ்ஐ செந்​தில்​ குமாரின் உயி​ரிழப்பு காவல்​துறைக்​கும், அவரது குடும்​பத்​தினருக்​கும் ஈடு செய்ய முடி​யாத பேரிழப்பு. அவரின் குடும்​பத்​தினருக்கு ரூ.40 லட்​சம் நிவாரண நிதி வழங்க உத்​தர​விட்​டுள்​ளேன்’ என தெரி​வித்​துள்​ளார்.

திருச்​சி​யில் 3 பேர்: திருச்சி மாவட்​டம் இனாம் சமயபுரம் பகுதி​யைச் சேர்ந்​தவர் ராஜா மகன் விஷால் (17). இவரது பெரியப்பா மகன் ராகுல் (17). பெற்​றோரை இழந்த ராகுல், தனது சித்​தப்பா ராஜாவின் வீட்​டில் வசித்து வந்​தார். இரு​வரும் கூலி வேலை செய்து வந்​தனர்.

நேற்று முன்​தினம் இரவு 11.30 மணி அளவில் சமயபுரம் பகுதி​யில் உள்ள தனியார் மருத்​து​வக் கல்​லூரி அருகே உள்ள புள்​ளம்​பாடி வாய்க்​கால் பகுதிக்கு சென்ற இரு​வரை​யும் ஒரு கும்​பல் சர​மாரியாக வெட்​டிக் கொலை செய்​து​விட்டு தப்​பியோடி​விட்​டது. கொலை நடந்த பகுதி​யில் உள்ள சிசி​டி​வி​யில் பதிவான காட்​சிகளை கொண்டு 3 பேரை போலீ​ஸார் பிடித்து விசா​ரித்து வரு​கின்​றனர். கொலை​யாளி​களை உடனடி​யாக கைது செய்ய வலியுறுத்தி உயி​ரிழந்த சிறு​வர்​களின் உறவினர்​களும் பொது​மக்​களும் சமயபுரம் சுங்​கச்​சாவடி அருகே தேசிய நெடுஞ்​சாலை​யில் நேற்று மறியலில் ஈடு​பட்​டனர்.

ஐடி ஊழியர்: திருச்சி மாவட்​டம் சமயபுரத்தை அடுத்த புறத்​தாக்​குடி வடக்கு தெரு​வைச் சேர்ந்​தவர் கிறிஸ்டோபர் (21). சென்​னை​யில் உள்ள ஐ.டி நிறு​வனத்​தில் பணி​யாற்றி வந்த இவர், தீபாவளியை கொண்​டாட சொந்த ஊருக்கு வந்​திருந்​தார், நேற்று முன்​தினம் வீட்​டுக்கு வெளியே பட்​டாசு வெடித்​துக் கொண்​டிருந்​தார்.

அவ்​வழி​யாக இருசக்​கர வாக​னத்​தில் சென்ற அதே பகுதி​யைச் சேர்ந்த டொனால்ட்(28) என்​பவருக்​கும், கிறிஸ்டோபருக்​கும் பட்​டாசு வெடித்​தது தொடர்​பாக வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. இதில் ஆத்​திரமடைந்த டொனால்ட், தனது இருசக்​கர வாக​னத்​தில் இருந்த ஸ்பேனரை எடுத்து கிறிஸ்டோபரின் நெஞ்​சில் குத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது. இதில், கிறிஸ்டோபர் உயி​ரிழந்​தார். இது​குறித்து சமயபுரம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரிக்​கின்​றனர்.

கூலித்​தொழிலாளி: பெரம்​பலூர் அருகே நொச்​சி​யம் கிராமத்​தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரவி (50), தீபாவளியன்று இரவு அங்​குள்ள மாரியம்​மன் கோயில் வளாகத்​தில் தூங்​கிக் கொண்​டிருந்​தார். அப்​போது, அதே பகுதி​யைச் சேர்ந்த அருள்​ராஜ் (35) மற்​றும் சிலர் பட்​டாசு வெடித்​துள்​ளனர். அவர்​களை ரவி கண்​டித்​துள்​ளார். நள்​ளிர​வில் கோயில் வளாகத்​தில் தூங்​கிக் கொண்​டிருந்த ரவியை அருள்​ராஜ் இரும்​புக் கம்​பியால் தலை​யில் தாக்​கி​விட்டு தப்​பி​விட்​டார். இதில் பலத்த காயமடைந்த ரவி உயி​ரிழந்​தார். அருள்​ராஜை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

ரவுடி சுட்​டுப் பிடிப்பு: கடலூர் வட்​டம் பெரிய காட்​டுப்​பாளை​யத்​தைச் சேர்ந்​தவர் ரவுடி பிருத்​விராஜன் (26). இவர் நேற்று முன்​தினம் இரவு அருளரசன் (29) என்​பவருடன் மது குடித்​தார். அப்​போது இரு​வருக்​கும் இடையே தக​ராறு ஏற்​பட்​டுள்​ளது. சிறிது நேரம் கழித்து அருளரசன் தனது அண்​ணன் அன்​பரசனுடன் வந்து பிருத்​விராஜனை தாக்​கினர்.

பீர் பாட்​டிலாலும் கத்​தி​யாலும் குத்தி விட்டு தப்​பி​விட்​டனர். மருத்​து​வ​மனைக்கு கொண்​டுசெல்​லும் வழி​யில் பிருத்​விராஜன் உயி​ரிழந்​தார். ரெட்​டிச்​சாவடி அருகே முந்​தி​ரிக்​காட்​டில் பதுங்​கி​யிருந்த அன்​பரசன் போலீ​ஸாரிடம் பிடிபட்​டார். சோதனைச்​சாவடி வழி​யாக அருளரசன் இருசக்​கர வாக​னத்​தில் செல்​வதை பார்த்த கடலூர் புதுநகர் போலீ​ஸார் அவரை விரட்​டிச் சென்​றனர். உதவி ஆய்​வாளர் முகிலரசுவை கத்​தி​யால் வெட்​டி​விட்டு தப்​பியோட முயன்ற அருளரசனை காவல் ஆய்​வாளர் இளவரசி துப்​பாக்​கி​யால் சுட்​டுப் பிடித்​தார்.

சொத்து தக​ராறில் கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் தியாகதுருகம் அடுத்த நின்​னையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் பாலசுப்​ரமணி​யன் (70). இவரது சகோ​தரர் சக்​திவேல் (67). இரு​வருக்​கும் சொத்து தக​ராறு இருந்து வந்​தது. தீபாவளியன்று, நின்​னையூர் பாலம் அருகே மது குடித்​துக் கொண்​டிருந்த பாலசுப்​பிரமணி​யனிடம் சக்​திவேல் மகன் தணிகைவேல் (35), சொத்து பிரச்​சினை குறித்து பேசிய​தாகவும், அப்​போது இரு​வருக்​கும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​ட​தாகவும் கூறப்​படு​கிறது. அப்​போது தணிகைவேல் தள்​ளி​விட்​டதில் கீழேவிழுந்த பாலசுப்​ரமணி​யன் தலை​யில் பலத்த காயம் ஏற்​பட்டு உயி​ரிழந்​தார். தியாகதுருகம் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து தணிகைவேலை கைது செய்​தனர்.

ஆட்டோ ஓட்​டுநர்: சென்னை வியாசர்​பாடி சத்தி மூர்த்தி நகரை சேர்ந்​தவர் தனுஷ் (19). ஆட்டோ ஓட்​டுநர். இவரது அண்​ணன் சிலம்​பரசன், தீபாவளியன்று இரவு 10 மணி​யளவில் சத்​திய மூர்த்தி நகர் 58-வது பிளாக் வழி​யாக சென்று கொண்​டிருந்​தார். அப்​போது, அந்த பகுதி​யைச் சேர்ந்த அப்​புக்​குட்டி என்​பவர், சிலம்​பரசனிடம் தக​ராறு செய்​துள்​ளார்.

இதுபற்றி கேள்​விப்​பட்​டதும், தனுஷ் அங்கு சென்று நியாயம் கேட்​டுள்​ளார். அப்​போது, அப்​புக்​குட்டி, அவரது தந்தை பொய்​யாது மற்​றும் கூட்​டாளி​கள் 4 பேர் சேர்ந்து தனுஷை தாக்கி அரிவாளால் வெட்டி உள்​ளனர். படுகாயத்​துடன் ஸ்​டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்ட தனுஷ், சிறிது நேரத்​தில் உயி​ரிழந்​தார்.

தலை​யில் கல்லை போட்டு: காஞ்​சிபுரம் மாநக​ராட்சி 21-வது வார்டு அரியந்த் அவென்யூ அருகே உள்ள ரயில்வே தண்​ட​வாளத்​தில் தலை மற்​றும் கண் பகுதி​களில் பலத்த காயங்​களு​டன் ரத்த வெள்​ளத்​தில் ஆண் ஒரு​வர் சடலமாக கிடந்​தார். இது​குறித்து காஞ்​சிபுரம் தாலுகா போலீ​ஸார் மற்​றும் அரக்​கோணம் ரயில்வே போலீ​ஸார் விசா​ரித்​தனர். முதல்​கட்ட விசா​ரணை​யில், உயி​ரிழந்​தவர் திருக்​காலிமேடு அடுத்த நேதாஜி நகர் பகுதி​யைச் சேர்ந்த பார்த்​திபன்(32) என்​பது தெரிய​வந்​தது. தீபாவளி தினத்​தன்று ரயில்வே தண்​ட​வாளம் அருகே நண்​பர்​களு​டன் அமர்ந்து மது அருந்​தி​யபோது ஏற்​பட்ட தக​ராறில் இவர் கொலை செய்​யப்​பட்​டிருக்​கலாம் என்​றும் போலீ​ஸார் சந்​தேகிக்​கின்​றனர்.

காரைக்​குடி தெற்கு தெரு​வைச் சேர்ந்​தவர் தங்​கச்​சாமி என்ற நவீன் (26). சரித்​திரப் பதிவேடு குற்​றவாளி​கள் பட்​டியலில் இருந்த இவர், சமீபத்​தில் ஜாமீனில் வெளிவந்​தார். தீபாவளியன்று இரவு நண்​பர்​களு​டன் காட்​டுப் பகுதி​யில் மது அருந்​திக் கொண்​டிருந்த நவீனை காரில் வந்த கும்​பல் கொலை செய்து விட்டு தப்​பியது. இது​தொடர்​பாக 7 பேரை கல்​லல் போலீ​ஸார் கைது செய்​தனர்.

மானாமதுரை அருகே வேலூர் முருகபாஞ்​சானைச் சேர்ந்த விக்​னேஷ் (24). இவர் மீது சில வழக்​கு​கள் உள்​ளன. நேற்று முன்​தினம் இரவு நண்​பருடன் பேசிக் கொண்​டிருந்​தார். அப்​போது, அங்கு வந்த கும்​பல் விக்​னேஷை வெட்​டிக் கொலை செய்​தது. சிப்​காட் போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர்.

திண்​டுக்​கல் எரியோடு பாண்​டியன் நகரைச் சேர்ந்த கார் ஓட்​டுநர் அஜீத்​குமார்(28). இவர் சுவேதா (26) என்ற பெண்ணை காதலித்து ஓராண்​டுக்கு முன்பு திரு​மணம் செய்​தார். நேற்று அதி​காலை குடும்​பத் தக​ராறில் சுவேதாவை கழுத்தை அறுத்து கொலை செய்த அஜீத்​குமார், பின்​னர் எரியோடு போலீ​ஸில் சரண் அடைந்​தார்.

விருதுநகர் பால​வனத்​தம் அரு​கிலுள்ள வடக்​குப்​பட்​டியை சேர்ந்த கூலித்​தொழிலாளி அன்​புச்​செல்​வம் (25), ஆரம்ப சுகாதார நிலை​யம் அருகே நேற்று முன்​தினம் நண்​பர்​களு​டன் மது அருந்​தினார். அப்​போது போதையில் ஏற்​பட்ட தக​ராறில் அவர் கொலை செய்​யப்​பட்​டார். இது​தொடர்​பாக 14 வயது சிறு​வன் உட்​பட 6 பேரை அருப்​புக்​கோட்டை போலீ​ஸார் கைது செய்​தனர்.

தீபாவளி நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரம்: உதவி ஆய்வாளர், சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் படுகொலை
“அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” - வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ட்ரம்ப் சந்தேகம்

X