

சோனம் வாங்சுக்
புதுடெல்லி: லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் தொடங்கினார். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து அவர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து வாங்சுக் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
மேலும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு தடுப்புக் காவலை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.
இதையடுத்து, சோனம் வாங்சுக்கின் தடுப்புக் காவலை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய உள்துறை நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 மாத சிறைவாசத்துக்கு பிறகு சோனம் வாங்சுக் விடுதலையாக உள்ளார்.