துபாயில் தாயின் மருத்துவ கட்டணம் ரூ.1.25 கோடி: இந்தியா அழைத்து வர முடியாமல் தவிக்கும் தமிழர்

துபாயில் தாயின் மருத்துவ கட்டணம் ரூ.1.25 கோடி: இந்தியா அழைத்து வர முடியாமல் தவிக்கும் தமிழர்
Updated on
1 min read

துபாய்: தமிழகத்​தைச் சேர்ந்​தவர் திலக் குமார் அனிருத்​ராஜ். இவரது மனைவி ஷாமினி ரமேஷ். தமிழகத்​தைச் சேர்ந்த இவர்கள், வேலைக்​காக 8 ஆண்​டு​களுக்கு முன் துபாய் சென்​றனர்.

இந்​நிலை​யில், மகன் குடும்​பத்தை பார்க்க திலக் குமாரின் தாய் துபாய் சென்​றுள்​ளார். அங்கு இவருக்கு பாக்​டீரியா தொற்று ஏற்​பட்​ட​தால், துபாய் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்டு தீவிர சிகிச்சை பிரி​வில் உள்​ளார். இவரது மருத்​துவ கட்​ட​ணம் ரூ.1.25 கோடியை தாண்​டி​விட்​டது.

தினசரி மருத்​துவ கட்​ட​ணம் ரூ.4 லட்​சம் உயர்​வ​தால் அவரால் மருத்​துவ கட்​ட​ணத்தை செலுத்த முடிய​வில்​லை. தனது தாயை இந்​தி​யா​வுக்கு அழைத்​துச் சென்று சிகிச்சை அளிக்க திலக் குமார் முடிவு செய்​தார். ஆனால், ஆம்புலன்ஸ் விமானத்​தில் இந்​தியா அழைத்து வர ரூ.7 லட்​சம் கட்​ட​ணம். ஆனால், தற்​போதைய போர் சூழலில் ஆம்​புலன்ஸ் விமான கட்​ட​ண​மும் ரூ.50 லட்​ச​மாகி​யுள்​ளது. இதனால் துபா​யில் உள்ள அறக்​கட்​டளை​யிடம் திலக் குடும்​பத்​தினர் உதவி கோரி​யுள்​ளனர்.

இவர்​களுக்கு நிதி​யுதவி கிடைத்​தா​லும், போர் சூழலில் ஆம்​புலன்ஸ் விமானம் கிடைக்​கும் வாய்ப்பு குறை​வாக உள்​ளது. இந்த சூழலை சமாளிப்​பது, உணர்வு ரீதி​யாக​வும், நிதி ரீதி​யாக​வும்​ மிக​வும்​ கடின​மாக உள்​ளது என்​கிறார்​ ஷாமினி.

துபாயில் தாயின் மருத்துவ கட்டணம் ரூ.1.25 கோடி: இந்தியா அழைத்து வர முடியாமல் தவிக்கும் தமிழர்
இந்தியாவில் உள்ள வெளிநாட்டினருக்கு 30 நாள் விசா நீட்டிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in