அசாம் தேர்தலில் முதல்வர் உட்பட பல கோடீஸ்வரர்கள் போட்டி

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா

Updated on
1 min read

குவாஹாட்டி: மொத்​தம் 126 உறுப்​பினர்​களைக் கொண்ட அசாம் சட்​டப்​பேர​வைக்கு ஏப்​.9-ம் தேதி ஒரே கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. வாக்கு எண்​ணிக்கை மே 4-ம் தேதி நடை​பெற உள்​ளது. இங்கு தொடர்ந்து 3-வது முறை​யாக ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வரு​கிறது. அதேவேளை​யில் கடந்த 2016-ல் இழந்த ஆட்​சியை மீண்​டும் கைப்​பற்ற காங்​கிரஸ் முயன்று வரு​கிறது.

இந்​நிலை​யில், அசாம் தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களின் பிர​மாணப் பத்​திரங்​களை ஆய்வு செய்​த​தில் கோடீஸ்​வரர்​கள் பலர் போட்​டி​யிடு​வது தெரி​கிறது. அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பணக்​கார வேட்​பாள​ராக கருதப்​பட்​டாலும் அவரை விட பணக்​காரர்​கள் பலர் இத்​தேர்​தலில் போட்​டி​யிடு​கி்ன்​றனர்.

அசாமில் கோடீஸ்வர வேட்​பாளர்​கள் பட்​டியலில் காங்​கிரஸ் கட்​சியை சேர்ந்த ராகுல் ராய் ரூ.261 கோடிக்கு மேற்​பட்ட சொத்​துகளு​டன் முதலிடத்​தில் உள்​ளார். இதையடுத்து அகில இந்​திய ஐக்​கிய ஜனநாயக முன்​னணி வேட்​பாளர் பத்​ருதீன் அஜ்மல் ரூ.226 கோடிக்கு மேற்​பட்ட சொத்​துகளு​டன் 2-வது இடத்​தி​லும் காங்​கிரஸ் கட்​சி​யின் ஜயந்தா காண்ட் ரூ.67 கோடி சொத்​துகளு​டன் 3-வது இடத்​தி​லும் உள்​ளனர்.

இதைத் தொடர்ந்து போடோலாந்து மக்​கள் முன்​னணி வேட்​பாளர் செவ்லி மொஹிலாரி (சு​மார் ரூ.63 கோடி), திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் ரோஜி அகமது (ரூ.54 கோடி), சுயேச்சை வேட்​பாளர் நந்​தி​கிரி புயான் (ரூ.47 கோடி) ஆகியோர் முறையே 4, 5 மற்​றும் 6-வது இடத்​தில் உள்​ளனர். முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ரூ.35 கோடி சொத்​துகளு​டன் 7-வது இடத்​தில் உள்​ளார்.

இவரை தொடர்ந்து பாஜக வேட்​பாளர்​கள் அசோக் சிங்​கால் (ரூ.34 கோடி), நபா குமார் தோலே (ரூ.33 கோடி), காங்​கிரஸ் வேட்​பாளர் அமினுல் ஹக் லஸ்​கர் (ரூ.30 கோடி) ஆகியோர் முறையே 8, 9 மற்​றும் 10-வது இடத்​தில் உள்​ளனர். இத்​தேர்​தலில் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்​மா, ஜலுக்​பரி தொகு​தி​யில் போட்​டி​யிடு​கிறார். அவரை எதிர்த்து மாநில காங்​கிரஸ் தலை​வரும் மக்​களவை எம்​.பி.​மான கவுரவ் கோகோய் போட்​டி​யிடு​கிறார். அசாமில் இவ்​விரு தலை​வர்​கள் இடையே நேரடி மோதல் ஏற்​பட்​டுள்ள இத்​தொகுதி மிகுந்த கவனம் பெற்​றுள்​ளது.

கவுரவ் கோகோய், முன்​னாள் முதல்​வர் தருண் கோகோ​யின் மகன் ஆவார். இவர் கடந்த 2014-ல் அரசி​யலில் நுழைந்​தது முதல் தொடர்ந்து 3 முறை மக்​கள​வைத் தேர்​தலில் வெற்றி பெற்​றுள்​ளார். முதல்​வர் ஹிமந்தா 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக தேர்​தல் அனுபவம் கொண்​ட​வர். முன்​னாள் காங்​கிரஸ் தலை​வ​ரான இவர் கடந்த 2015-ல் பாஜக​வில் இணைந்​தார். காங்​கிரஸ் கட்​சிக்​கும் பாஜக​வுக்​கும் பல தேர்​தல்​ பிரச்​சா​ரங்​களை இவர்​ வெற்​றிகர​மாக மேற்​கொண்​டுள்​ளார்​.

<div class="paragraphs"><p>அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா</p></div>
காங்., பாஜக ஆட்சியில் மாநில அந்தஸ்து வழங்காதது ஏன்? - புதுச்சேரி பிரச்சாரத்தில் விஜய் கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in