கொல்கத்தா காளி கோயிலின் ரூ.100 கோடி ஆபரண பெட்டக சாவியை காணவில்லை - நீதிமன்றத்தில் புகார் மனு

கொல்கத்தா காளி கோயிலின் ரூ.100 கோடி ஆபரண பெட்டக சாவியை காணவில்லை -  நீதிமன்றத்தில் புகார் மனு
Updated on
1 min read

புதுடெல்லி: கொல்கத்தா​வில் உள்ள ஆதி கங்கை ஆற்​றின் கரையில் காளி​காட் கோயில் அமைந்​துள்​ளது. இது, இந்​துக்​களின் புகழ்​பெற்ற மற்​றும் புனித தலமாகக் கருதப்​படு​கிறது. சிவனின் கோபத்​திற்கு ஆளான பார்​வதி தேவி​யின் 51 சக்தி பீடங்​களில் ஒன்றாக இது கருதப்​படு​கிறது.

இந்த நிகழ்​வில் பார்​வதி தேவி​யின் வலது பாதத்​தின் கால் விரல்​கள் இங்​கு​தான் விழுந்​த​தாக நம்​பப்​படு​கிறது. இக்​கோயி​லில் நீண்ட தங்க நிற நாக்​கைக் கொண்ட காளி தேவி​யின் தனித்​து​வ​மான சிலை ஒன்று உள்​ளது. கொல்​கத்​தா​வின் வரலாற்​றுச் சிறப்​புமிக்க காளி​காட் கோயில் சமீப​கால​மாக பெரும் சர்ச்​சை​யில் சிக்​கி​யுள்​ளது.

கோயிலுக்கு வரும் பக்​தர்​களால், பல நூறு ஆண்​டு​களாக சேர்ந்த ஆபரணங்​கள் ஒரு பெட்​டகத்​தில் பூட்டி வைக்​கப்​பட்​டுள்​ளது. அம்​மனின் ஆபரணங்​கள் மற்​றும் விலைம​திப்​பற்ற பொருட்​களைப் பாது​காப்​ப​தற்​காக அரசு வங்கி லாக்​கர் ஒதுக்​கப்​பட்​டிருந்​தா​லும், அதற்​கான சாவி 1980-ம் ஆண்டு முதல் காணா​மல் போய்​விட்​ட​தாகப் புகார் கிளம்பி உள்​ளது.

இப்​பு​காரை விசா​ரிக்​கக் கோரி அப்​பகு​தி​யின் பழமை​யான நிலப்​பிரபுக்​கள் குடும்​பத்​தினரில் முக்​கிய​மானவ​ரான சபர்னா ராய் சவுத்ரி கொல்​கத்தா நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளார்.

இது குறித்து சபர்னா ராய் மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: கோயி​லின் சொத்​துகளை​யும் ஆபரணங்​களை​யும் பாது​காப்​ப​தற்​காகவே இந்த பாது​காப்பு பெட்​டகம் உரு​வாக்​கப்​பட்​டது. இதன் சாவி, கடந்த 46 ஆண்​டு​களுக்​கும் மேலாகக் காணா​மல் போயுள்​ளது.

கோயில் சொத்​துகளின் கணக்​கைக் கையாளும் பொறுப்​பைக் கொண்ட குழு​வின் பதவிக்​கால​மும் முடிந்​து​விட்​டது.

அம்​மனுக்​குச் சொந்​த​மான அந்த விலைம​திப்​பற்ற ஆபரணங்​கள் எங்கே உள்​ளன? அவை பாது​காப்​பாக உள்​ளன​வா? என்ற ஆழ்ந்த கவலை எழுந்​துள்​ளது.

மேலும் இதில், ரூ.1,000 கோடிக்​கும் அதி​க​மான மதிப்​புள்ள நிதி முறை​கேடு​களும், மோசடிகளும் நடந்​திருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. எனவே இவ்​விவ​காரத்தை விசா​ரித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அந்த மனு​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கொல்கத்தா காளி கோயிலின் ரூ.100 கோடி ஆபரண பெட்டக சாவியை காணவில்லை -  நீதிமன்றத்தில் புகார் மனு
குஜராத்தில் ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in