கொல்கத்தா: சேமிப்பு கிடங்கு கட்டுமானத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

கொல்கத்தா: சேமிப்பு கிடங்கு கட்டுமானத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

கொல்கத்தா: கொல்கத்தாவின் தரதலா பகுதியில் அமைந்துள்ள சேமிப்பு கிடங்கு கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

தரதலா பகுதியில் உள்ள பிரேஸ் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், புதன்கிழமை மதியம் சுமார் 1.30 மணியளவில், மூன்று அடுக்குக் கிடங்கின் மூன்றாவது தளத்தில் கூரை அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்த போது, திடீரென அந்தக் கட்டிடம் நிலைகுலைந்து கீழே விழுந்தது. இந்த கட்டுமான திட்ட அனுமதியில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதில், கட்டுமானத் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 20 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மேற்குவங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார். இதில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அரசு அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் என கூறியுள்ளார்.

சேமிப்பு கிடங்கு கட்டுமானம் இடிந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், கொல்கத்தா போலீஸார், தீயணைப்பு துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா: சேமிப்பு கிடங்கு கட்டுமானத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலியை முந்திய ஷுப்மன் கில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in