ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலியை முந்திய ஷுப்மன் கில்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலியை முந்திய ஷுப்மன் கில்
Updated on
1 min read

துபாய்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலியை முந்தியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்.

புதன்கிழமை அன்று வெளியான ஐசிசி கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையில் ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் சுமார் மூன்று இடங்கள் முன்னேறி, 791 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் ஷுப்மன் கில். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 84 மற்றும் 154 ரன்களை அவர் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் காயம் காரணமாக பங்கேற்று விளையாடாத விராட் கோலி, 768 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அவர் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளார். ரோஹித் சர்மா 4-வது இடத்திலும், கே.எல்.ராகுல் 11-வது இடத்திலும், ஸ்ரேயஸ் அய்யர் 14-வது இடத்திலும், இஷான் கிஷன் 43-வது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் நியூஸிலாந்து வீரர் மேட் ஹென்றி மற்றும் இந்தியாவின் பும்ரா ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா முதலிடத்தில் உள்ளார். வாஷிங்டன் சுந்தர் 9-வது இடத்திலும், அக்சர் படேல் 12-வது, இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் அக்சர் படேல் 12-வது இடத்திலும், ஜடேஜா 15-வது இடத்திலும் உள்ளனர். ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் 7-வது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலியை முந்திய ஷுப்மன் கில்
இந்திய அணியில் சூர்யான்ஷ் ஷெட்கே

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in