எத்தனால் தயாரிப்பு என்ற பெயரில் ம.பி.யில் ரூ.1,200 கோடிக்கு அரிசி ஊழல்: கார்கே குற்றச்சாட்டு

காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே

காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே

Updated on
1 min read

புதுடெல்லி: மத்​திய பிரதேசத்​தில் எத்​த​னால் தயாரிப்பு என்ற பெயரில் ரூ.1,200 கோடி மதிப்​பில் அரிசி ஊழல் நடை​பெற்​றுள்​ள​தாக காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே குற்​றம் சாட்டியுள்​ளார்.

பெட்​ரோலுடன் கலப்​ப​தற்​காக எத்​த​னால் உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. இதை அதி​கரிக்​கும் நோக்​கில், மானி​யத் திட்​டத்​தின் கீழ் எத்​த​னால் ஆலைகளுக்கு அரிசி அனுப்​பப்​படு​கிறது. மத்​திய பிரதேசம் சிந்த்​வா​ரா​வில் உள்ள ஓர் எத்​த​னால் ஆலைக்கு அனுப்​பப்​பட்ட அரிசி மூட்​டைகள் அங்கு சென்​றடைய​வில்லை என்று இந்​திய உணவுக் கழகம் புகார் அளித்​தது.

இந்நிலையில், மானிய விலை​யி​லான அந்த அரிசி, தனி​யார் ஆலைகளுக்​குத் திருப்​பி​விடப்​பட்டு கொள்​முதல் மற்​றும் அரவை முறை மூலம் மீண்​டும் அரசு நிறு​வனங்​களுக்கே விற்​கப்​பட்​ட​தாக குற்​றச்​சாட்​டு​ எழுந்​துள்​ளது. இதுகுறித்து சிறப்பு புல​னாய்​வுக் குழு விசா​ரணை நடத்​துகிறது. இந்த வழக்​கில் இது​வரை 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதுகுறித்து காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​தி​யப் பிரதேசம் தற்​போது ஊழலின் மைய​மாக மாறி​யுள்​ளது. பாஜகவும் அரசு இயந்​திர​மும் இணைந்து பொது​மக்​களுக்கு சொந்​த​மான அரிசியை கொள்​ளை​யடிக்​கின்​றன. எத்​த​னால் என்ற பெயரில் ரூ.1,200 கோடி அரிசி ஊழல் வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. ஊட்​டச்​சத்து குறை​பாடுள்ள குழந்​தைகள், கர்ப்​பிணிப் பெண்கள் மற்​றும் இளம் பெண்​களின் ஊட்​டச்​சத்​துக்​காகப் பயன்​படுத்தப்பட வேண்​டிய அரிசி, ஊழலுக்கு பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

அரிசி ஆலை அதிபர்​கள், எத்​த​னால் மாஃபி​யாக்​கள் மற்​றும் பாஜக அரசின் ஆதர​வோடு 5 லட்​சம் டன் அரிசி இந்த ஊழல் விளை​யாட்​டில் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இம்மாநிலத்தை ஊழலின் மாதிரி​யாக பாஜக மாற்​றி​யுள்​ளது, வழக்​கம் போல் பிரதமர் மோடி அமை​தி​யாக வேடிக்கை பார்க்​கிறார்​. இவ்​​வாறு ​கார்​கே கூறி​னார்​.

<div class="paragraphs"><p>காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே</p></div>
170 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து மகளிர் அணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in