

லார்ட்ஸ்: இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 74.5 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 83, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 58, தீப்தி சர்மா 57 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்தது. நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 59.1 ஓவர்களில் 170 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக எமி ஜோன்ஸ் 52, கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் 44 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய மகளிர் அணி தரப்பில் கிரந்தி கவுடு 5 விக்கெட்களை வீழ்த்தினார். சாயாலி சத்கரே, ஸ்னே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
115 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை இந்திய மகளிர் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 42 ஓவர்களுக்கு 1 விக்கெட் இழந்து 154 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மிருதி மந்தனா 69, யாஸ்திகா 39 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஷபாலி வர்மா, 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.