பதவியேற்ற இரண்டே நாளில் கர்நாடக மூத்த‌ அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா

பதவியேற்ற இரண்டே நாளில் கர்நாடக மூத்த‌ அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா
Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாடக முதல்​வ​ராக டி.கே.சிவகு​மார் கடந்த 3-ம் தேதி பதவி​யேற்​றார். அன்​றைய தினம் டி.கே.சிவகு​மாருடன் துணை முதல்​வர் உட்பட 12 அமைச்​சர்​கள் மட்​டுமே பதவி​யேற்​றனர்.

அவர்களில் மூத்த அமைச்​சர்​ ராமலிங்க ரெட்​டிக்கு நீர்​வளத் துறையும், கே.ஜே.ஜார்​ஜிக்கு மின்​சா​ரம் மற்​றும் சுற்​றுலா துறை​யும் ஒதுக்​கப்பட்டது. அவர்​கள் வேறு துறையை கோரிய நிலை​யில் இந்த துறை​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​ட​தால் இரு​வரும் அதிருப்தி அடைந்​த​தாக கூறப்​படு​கிற‌து.

இந்​நிலை​யில் ராமலிங்க ரெட்டி நேற்று தனது அமைச்​சர் பதவியை ராஜி​னாமா செய்​தார். பதவி​யேற்ற 2-வது நாளில் மூத்த‌ அமைச்​சர் ராஜி​னாமா செய்​த​தால் முதல்​வர் டி.கே.சிவகு​மாருக்கு நெருக்​கடி ஏற்​பட்​டுள்​ளது. அதிருப்தி அடைந்​துள்ள ராமலிங்க ரெட்​டியை சமா​தானப்படுத்​தும் முயற்​சி​யில் அவர் இறங்​கி​யுள்​ளார். மூத்த காங்​கிரஸ் தலை​வ​ரான ராமலிங்க ரெட்டி 6 முறை அமைச்​சர் பதவி வகித்​துள்​ளார்.

உள்துறை, போக்​கு​வரத்து உள்​ளிட்ட துறை​களின் அமைச்​சர் பதவி​களை வகித்​துள்ள அவர் மீது பெரிய அளவில்​ ஊழல்​ புகார் எதுவும் எழுந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்ற இரண்டே நாளில் கர்நாடக மூத்த‌ அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா
ராகுல் காந்தி முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கு கார்கே வேட்பு மனு தாக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in