மால்டாவில் நீதிபதிகள் சிறைவைப்பு சம்பவம்: பின்னணியில் செயல்பட்ட வழக்கறிஞர் விமானத்தில் தப்பிச் செல்லும் முன் கைது

மால்டாவில் நீதிபதிகள் சிறைவைப்பு சம்பவம்: பின்னணியில் செயல்பட்ட வழக்கறிஞர் விமானத்தில் தப்பிச் செல்லும் முன் கைது
Updated on
1 min read

சிலிகுரி: மேற்குவங்கம் மால்​டா​வில் நீதிப​தி​கள் சிறைவைப்பு சம்​பவத்​துக்கு காரண​மான வழக்​கறிஞர் சிலிகுரி விமான நிலை​யத்​தில் கைது செய்​யப்​பட்​டார்.

மேற்கு வங்​கம் மால்டா மாவட்​டத்​தில் நடை​பெற்ற வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்த பணி​யின் போது (எஸ்​ஐஆர்), வாக்​காளர்​களின் பெயர்​கள் அதி​கள​வில் நீக்​கப்​பட்​ட​தாக புகார் எழுந்​தது. மேற்​கு​வங்​கத்​தில் நடை​பெறும் எஸ்​ஐஆர் பணி​களை அங்​குள்ள மாவட்ட நீதிப​தி​கள் கண்​காணிக்க உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே உத்​தர​விட்​டிருந்​தது. அதன்​படி வாக்​காளர்​களின் புகார்​கள் குறித்து ஆய்வு செய்ய 3 பெண் நீதிபதிகள் உட்பட மாவட்ட நீதிப​தி​கள் 7 பேர் கலி​யாசக் வட்​டார வளர்ச்சி அலு​வல​கத்​துக்கு சென்றனர்.

இது குறித்து தகவல் கிடைத்​ததும் அங்கு ஒரு கும்​பல் கூடியது. அவர்​கள் நீதிப​தி​களிடம் பேச வேண்​டும் என கோரிக்கை விடுத்​தனர். இதற்கு அனு​மதி மறுக்​கப்​பட்​டது. இதனால் அந்த கும்​பல் நீதிப​தி​கள் 7 பேரை​யும் வட்​டார வளர்ச்சி அலு​வல​கத்​துக்​குள் சிறை வைத்​தது. இது உச்ச நீதி​மன்​றத்​தின் தலைமை நீதிபதி கவனத்​துக்கு கொண்டு செல்​லப்​பட்​டது. அதன்​பின் போலீ​ஸார் தடியடி நடத்தி நள்​ளிரவு 1 மணி​யள​வில் நீதிப​தி​களை மீட்​டனர். சுமார் 9 மணி நேரம் போராட்டக்காரர்களின் பிடியில் நீதிபதிகள் இருந்தனர். ஆனால், தனக்கு எதுவும் தெரியாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

இச்​சம்​பவத்தை தானாக முன்​வந்து விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், என்ஐஏ விசா​ரணைக்கு உத்​தர​விட்​டது. போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில் இச்​சம்​பவத்​தின் பின்​னணி​யில் வழக்​கறிஞர் மொஃ​பாக்​கருள் இஸ்​லாம் என்​பவர் செயல்​பட்​டது தெரிய​ வந்​தது. அவர் தப்​பிச் செல்​வதற்​காக சிலிகுரி பக்​டோக்ரா விமான நிலை​யத்​தில் இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. இதையடுத்து அங்கு சென்ற போலீ​ஸார் வழக்​கறிஞர் மொஃ​பாக்​கருள் இஸ்​லாமை கைது செய்​தனர். இச்​சம்​பவம் தொடர்​பாக போலீ​ஸார் இது வரை 33 பேரை கைது செய்​துள்​ளனர்​.

மால்டாவில் நீதிபதிகள் சிறைவைப்பு சம்பவம்: பின்னணியில் செயல்பட்ட வழக்கறிஞர் விமானத்தில் தப்பிச் செல்லும் முன் கைது
Realme 16 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in