Realme 16 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Realme 16 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 16 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள செல்ஃபி மிர்ரர் (Mirror) தான் இந்த போனின் ஹைலைட் என தகவல்.

ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.57 இன்ச் டிஸ்பிளே

  • மீடியாடெக் டிமான்சிட்டி 6400 டர்போ சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

  • 8, 12ஜிபி ரேம்

  • 128, 256ஜிபி ஸ்டோரேஜ்

  • 50 + 2 மெகாபிக்சல் என இரண்டு கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது

  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

  • 7,000mAh பேட்டரி

  • 60 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • 5ஜி நெட்வொர்க்

  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

  • இந்த போனின் விலை ரூ.31,999 முதல் தொடங்குகிறது

Realme 16 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
ஆயுஷ் மாத்ரே, சர்பராஸ், துபே அபாரம்: சிஎஸ்கே 209 ரன்கள் குவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in