13 நாடுகள் வழியாக 22,000 நாட்டிக்கல் மைல் பயணிக்கும் இந்திய போர் கப்பல்

13 நாடுகள் வழியாக 22,000 நாட்டிக்கல் மைல் பயணிக்கும் இந்திய போர் கப்பல்

Published on

புதுடெல்லி: கேரள மாநிலம் கொச்​சி​யிலுள்ள கடற்​படை தளத்திலிருந்து நேற்று ஐஎன்​எஸ் சுதர்​ஷினி கப்​பலின் நீண்ட தூர பயணத்தை தெற்கு கடற்​படை கமாண்​டிங் இன் சீப் அதி​காரி​யும், துணை தளப​தி​யு​மான சமீர் சக்​சேனா தொடங்​கி​ வைத்​தார்.

இந்த கப்​பல் 22 ஆயிரம் நாட்​டிக்​கல் மைல் தூரத்​துக்கு பயணிக்க உள்​ளது. 13 நாடு​கள் வழி​யாக 18 துறை​முகங்​களுக்கு பயணம் செய்யும். இதுகுறித்து கடற்​படை செய்​தித் தொடர்​பாளர் ஒரு​வர் கூறும்​போது, “ஐஎன்​எஸ் சுதர்​ஷினி கப்​பல் நீண்ட தூர பயணத்தை தற்​போது தொடங்​கி​யுள்​ளது.

இந்த ‘வரலாற்​றுச் சிறப்​புமிக்​கப் பயணம்’ இந்​தி​யா​வின் கடல்​சார் முயற்​சிக்கு ஒரு சக்​தி​வாய்ந்த அடை​யாள​மாகத் திகழ்​கிறது. இது உலகளா​விய கடல்​சார் நடவடிக்​கை​களில் நாட்​டின் முக்​கி​யத்​து வத்தை வெளிப்​படுத்​துகிறது. கடந்த ஆண்டு டிசம்​பரில் திருவனந்த​புரத்​தில் நடை​பெற்ற கடற்​படை தின விழா​வில் பங்கேற்று சாசகங்​கள் செய்​தது” என்​றார்.

மேலும் பிரான்​ஸில் வரும் மார்ச்​-ஏப்​ரலில் நடை​பெறவுள்ள கப்​பல் கண்​காட்சி திரு​விழா​விலும் பங்​கேற்​க​வுள்​ளது. இதைத் தொடர்ந்து வரும் ஜூலை​யில் அமெரிக்​கா​வில் நடை​பெறவுள்ள அந்​நாட்​டின் 250-வது சுதந்​திர தினக் கொண்​டாட்​டத்​தி​லும் பங்​கேற்​கும். அப்​போது நியூ​யார்க் நகருக்கு இந்​தக் கப்​பல் செல்​லும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

13 நாடுகள் வழியாக 22,000 நாட்டிக்கல் மைல் பயணிக்கும் இந்திய போர் கப்பல்
பத்து நிமிட விநியோகத்துக்கு முற்றுப்புள்ளி வரவேற்கத்தக்கது!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in