உ.பி.யின் 403 தொகுதியிலும் ஜன் நீதி கட்சி தனித்து போட்டி: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திவ்யா மிட்டல் தகவல்

உ.பி.யின் 403 தொகுதியிலும் ஜன் நீதி கட்சி தனித்து போட்டி: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திவ்யா மிட்டல் தகவல்
Updated on: 
1 min read

லக்னோ: உத்​தர பிரதேசத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதி​காரியான திவ்யா மிட்டல் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பத​வியை ராஜினாமா செய்​தார். பின்னர், ‘ஜன் நீதி பாரத்’ என்​கிற புதிய கட்சியை தொடங்​கினார்.

இந்​நிலை​யில், மிர்​சாபூரில் நேற்று மக்​களிடையே உரையாற்​றிய திவ்யா மிட்​டல், “2027-ல் நடைபெறும் உத்​தர பிரதேச சட்​டப் பேரவை தேர்​தலில் அனைத்து (403) இடங்​களி​லும் ஜன் நீதி பாரத் தனித்து போட்​டி​யிடும். அதற்கு உங்​கள் ஆதரவு தேவை.

உ.பி.யில் உள்ள அனைத்து 403 தொகுதி​களி​லும் வேட்​பாளர்​களை நிறுத்​து​வோம். தற்​போதுள்ள ஏற்​பாட்​டில் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் பெரும்​பாலும் அரசுக்​கும் பொது​மக்​களுக்​கும் இடையே இடைத்​தரகர்​களாகச் செயல்​பட்டு வந்​தனர். ஆனால், அதற்கு மாறாக, ஜன் நீதி பாரத் பிரதி​நி​தி​கள் குடிமக்​களுக்​குப் பொறுப்​புடைய​வர்​களாக இருப்​பார்​கள்.

அரசி​யல் கட்​சிகள் ஒன்​றுக்​கொன்று போட்​டி​யிடுவது போல் தோன்​றலாம், ஆனால் முடிவெடுக்​கும் அதி​காரத்தை சாதா​ரண மக்​களின் கைகளில் இருந்து விலக்கி வைப்​ப​தில் அவை உடன்​படு​கின்​றன” என்றார்.

உ.பி.யின் 403 தொகுதியிலும் ஜன் நீதி கட்சி தனித்து போட்டி: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திவ்யா மிட்டல் தகவல்
மகளிர் அணி நிர்வாகிகளுடன் தனுஷ் கலந்துரையாடல்: 3,000 பேருக்கு விருந்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in